நடிகர் யாஷ் இன் சகோதரியாக களமிறங்கும் நயன்!-எல்லாம் போச்சே

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவர்.

தமிழில் நடிகை என்றாலே நயனின் பெயர் தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும்.

இவர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு இரு இரட்டை குழந்தைகள் உண்டு.

இவர் திருமணம் செய்து கொண்டதில் இருந்து இவருக்கு அடி மேல் அடி விழுந்து கொண்டே இருக்கிறது.. இவருக்கு பட வாய்ப்புகளும் சரியாக கிடைக்கவில்லை. கிடைக்கும் படவாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தவில்லை.

இவர் நடித்த படங்கள் எல்லாம் தோல்வியில் முடிந்தன. அன்னபூரணி படமும் ஓடிடி யில் வெளியானது. அப்படம் குறித்து பிராமணியர்கள் சர்ச்சையை ஏற்படுத்த இதுவும் ஓடிடி யில் இருந்து தூக்கபட்டது.

தற்போது படவாய்ப்பு இல்லாமல் பிஸினஸில் இறங்கி விட்டார். ரேஸ்ட்ரோரன்ட், நப்கீன் போன்ற பிஸினஸ்களில் இறங்கி விட்டார்.

இவ்வாறு இருக்க கே ஜி எப் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை வென்றவர் தான் யாஷ்.

யாஷ் கன்னட சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்கின்றார். கே ஜி எப் 2 முதல் நாள் 150 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இவ்வாறு இருக்க யாஷ் நடிக்கும் படத்தில் நயன் யாஷ்ற்கு தங்கையாக நடிக்கவுள்ளாராம்.

கீத்து  மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் தற்போது நடித்து வரும் திரைப்படம் டாக்சிக். இப்படத்தில் யாஷுடன் இணைந்து அவருடைய சகோதரி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிக்கவிருந்தார். ஆனால் தற்போது அவர் விலகிவிட்டார்.

அவருடைய இடத்திக்கு நயன் தாவியுள்ளார். கீத்து  மோகன்தாஸ் நயனிடம் கதை சொல்ல நயனும் ஓகே சொல்லி விட்டாராம். இருப்பினும் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. நயன் சகோதரியாக நடிக்க தொடங்கியது எங்கு போய் முடிய போகிறதோ தெரியவில்லை.

more news

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*