கங்கனா ரனாவத் தாம் தூம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஜெயலலிதா பயோபிக்காக உருவான தலைவி படத்தில் நடித்திருந்தார். சந்திரமுகி 2 படத்திலும் நடித்திருந்ததார். சந்திரமுகி படத்தையையே அசிங்க படுத்தி விட்டார் என்று ரசிகர்கள் திட்டி வருக்கின்றனர்.
இவர் பஜாக விற்கு ஆதரவாக பேசியதால் இவரை ரசிகர்கள் உட்பட அனைவரும் திட்டி வருகின்றனர்.
சண்டிகர் விமான நிலையத்தில் நடிகையும், பாஜக எம்பியாக தேர்வாகி உள்ளவருமான கங்கனா ரனாவத்தை நேற்று சிஐஎஸ்ஃஎப் பெண் காவலர் குல்விந்தர் கவுர் கன்னத்தில் அறைந்தார். இது பெரும் சர்ச்சையான நிலையில் குல்விந்தர் கவுர் யார்? அவரது பின்னணி என்ன? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
கங்கனா விவசாயிகள் பற்றி மிகவும் தர குறைவாக பேசியுள்ளார். இதனால் தான் நான் அவரை அறைந்தேன் என்று கூறியுள்ளார். தன்னுடைய அம்மாவும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டார் என்றும் கூறியுள்ளார். கங்கனாவின் கன்னத்தில் அவருடைய 5 கை விரல்களும் பதிந்துள்ளது.
அந்த பெண்ணுக்கு எதிராக பாஜக அதரவாளர்க்கால் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த பெண் செய்த செயல் நியாயமாக இருந்தாலும் பணியில் இருக்கும் போது இந்த தவறை செய்தமையால் அவரை இடைக்கால பணி நீக்கம் செய்துள்ளது. அவர் மீது புகாரும் அளிக்க பட்டுள்ளது.
இந்த பெண்ணின் செயலுக்கு ஆதரவாக சேரன் தனது டூவீட்டரில் பதிவு செய்துள்ளார். அதற்கும் பாஜக ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
அவருடைய பதிவில் இந்த பெண்மணியின் கோபத்தில் நியாயம் இருப்பதாக பார்க்கிறேன்.. அந்த அடி நடிகைக்காகனதல்ல. வாக்களித்த மக்களுக்கானது.. விவசாயிகளின் உணர்வு தெரியாமல் பேசிய அந்த வார்த்தைகளுக்கு பின்னும் இந்த கவர்ச்சிக்கு ஓட்டு விழுகிறது. என்று கூறியுள்ளார்.