படிகம் என்றால் என்ன

அலங்கார பாவனைகளுக்கு பிரதானமானதொன்றாக படிகம்கள் பயன்படுகின்றன. இன்று படிகங்களின் பாவனையானது அதிகரித்து காணப்படுகிறது.

படிகம் என்றால் என்ன

படிகம் எனப்படுவது அணுக்கள், மூலக்கூறுகள், அயன்கள் என்பன ஒழுங்கமைவான முறையில் திரும்ப திரும்ப வரும் வடிவொழுங்கில் முப்பரிமாணங்களிலும் நெருக்கமாக அமைந்துள்ள ஒரு திண்மமே படிகமாகும்.

இதனை பளிங்கு என்றும் கூற முடியும். படிகங்களானவை திண்மமாதல் செயற்பாட்டின் போதே உருவாகின்றன. மேலும் பல்வேறு சிற்பக்கலை வேலைப்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

படிகங்களின் பயன்பாடு

நகைகள், காதணிகள், ரத்தின வளையல்கள் போன்றவற்றை தயாரிப்பதற்கு படிகங்கள் பயன்படுத்தப்படுகின்றது.

பண்டைய காலங்களிலிருந்து பாதுகாப்பிற்காகவும், சடங்குகள் மற்றும் அதிஸ்டத்தின் தாயத்துக்களாகவும் படிகங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

உடல் ஆரோக்கியத்தினை சீரமைப்பதற்கு ஓர் உந்து சக்தியாக படிகங்கள் காணப்படுகின்றன. இன்றைய காலப்பகுதிகளில் தியானத்தின் போது இந்த படிக கற்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

இதனூடாக மன அமைதி ஏற்படுவதோடு சிறப்பாக வாழ்வதற்கும் படிகங்கள் துணைபுரிகின்றன. மேலும் பல்வேறு அலங்கார விடயங்களிலும் இதன் பாவனையானது அதிகரித்துகொண்டே வருகின்றது.

பண்புகள் மூலம் தொகுக்கப்பட்ட படிகங்கள்

கலவை படிகங்கள்

சமநிலை படிகத்தில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் இடையில் உண்மையான ஒருங்கிணைந்த பிணைப்புக்கள் காணப்படுகின்றன. இவ்வாறாக காணப்படுவனவையே கலவை படிகங்களாகும். இந்த படிகங்கள் அதிகமாக உருகும் புள்ளிகளை கொண்டுள்ளன. இவற்றிற்கு உதாரணமாக துத்த நாகம், சல்பைட் படிகங்கள் போன்றவற்றை கூறலாம்.

அயனிக் படிகங்கள்

அயனிக் படிகங்களானவை எலக்ரோஸ்டிக் படைகளால் (அயனிப் பிணைப்புகளால்) ஒன்றாக இணைக்கப்பட்டு காணப்படுகின்றன. இது அதிகமாக உருகக் கூடியவையாகும். உதாரணம் மேசை உப்பு

மூலக்கூற்று படிகங்கள்

மூலக்கூற்று படிகங்களானவை பல்வேறு மூலக்கூறுகளை கொண்டமைந்து காணப்படும். இது ஒப்பீட்டளவில் குறைந்து உருகக் கூடியதாக காணப்படுகிறது. உதாரணம் சுக்ரோஸின் படிக வடிவமாகும். இது வன்டொர்வால்ஸ் படைகள் அல்லது ஹைட்ரஜன் பிணைப்பு ஒத்துழைப்பு அல்லாத ஒருங்கிணைப்புக்களால் மூலக்கூறு படிகமானது அமைந்துள்ளது.

உலோக படிகங்கள்

உலோக படிகங்களானவை மிகவும் அடர்த்தியானதாகவும் அதிகம் உருகும் புள்ளிகளை உடையதாகவும் காணப்படுகின்றன. இந்த படிகங்களில் அணுவினுடைய வெளிப்புற எலக்ரோன்களானவை அவற்றை சுற்றி மிதக்கக் கூடியதாக காணப்படுகின்றன.

கனசதுர படிக முறைமை

படிக அமைப்பில் கனசதுர படிக அமைப்பு என்பது படிகங்களிலும் தனிமங்களிலும் காணப்படும் வடிவங்களில் உள்ளதாகும். இது மூன்று முக்கிய வடிவங்களை கொண்டுள்ளது. அதாவது மூல கனசதுரம், பொருள் மைய கனசதுரம், முக மைய கனசதுரம் போன்றனவாகும்.

மூல கனசதுரம்

இது ஒவ்வொரு மூலையிலும் ஒரு அணிக்கோவை புள்ளியினை கொண்டிருக்கும். இந்த அணிக்கோவை புள்ளியில் இருக்கும் ஒவ்வொரு அணுவும் அடுத்தடுத்து இருக்கும் எட்டு கனசதுரங்களால் சமமாய் பகிர்ந்து கொள்ளப்பட்டு காணப்படும்.

பொருள்மைய கனசதுரம்

இது ஒரு அணிக்கோவை புள்ளிகளை கொண்டுள்ளதோடு மாத்திரமல்லாமல் மொத்தம் இரண்டு அணிக்கோவை புள்ளிகளை உடையதாக காணப்படும்.

முகமைய கனசதுரம்

அலகறையின் ஒவ்வொரு முகத்திலும் ஒரு அணிக்கோவை புள்ளி காணப்படும். இவை ஒவ்வொன்றும் சரியாக இரண்டு அடுத்தடுத்த அலகறைகளால் பகிரப்படும். இவற்றை தவிர எட்டு மூலைப் புள்ளிகளும் அமைந்து காணப்படும்.

மேலும் முகமைய கனசதுரமானது அறுகோண நெருக்க பொதிவு அமைப்புடன் மிக நெருங்கிய தொடர்புடையதாக காணப்படும். மேற்குறிப்பிட்ட அடிப்படையில் பல்வேறு வகையில் படிகங்களானவை பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

மேலும் வருமானத்தினை ஈட்டிக்கொள்வதற்கான ஒரு சிறந்த முறைமையாகவும் படிகங்கள் காணப்படுகின்றன.

You May Also Like:

உணவு வலை என்றால் என்ன

மூன்றாம் பிறை என்றால் என்ன