பாண்டவர்கள் எதிர்கொண்ட ஐந்து சிக்கலான சூழ்நிலைகள் கட்டுரை

“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தருமம் வெல்லும்” என்ற நியதியை தெளிவுர எடுத்துக்காட்டும் ஓர் இலக்கிய காவியமான மகாபாரதம் மனித வாழ்க்கைக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகும்.

பாண்டவர்கள் எதிர்கொண்ட ஐந்து சிக்கலான சூழ்நிலைகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பஞ்ச பாண்டவர் என்போர்
  • மகாபாரதத்தை இயற்றியோர்
  • அரக்கு மாளிகைக்கு தீ வைத்தல்
  • திரௌபதையை திருமணம் செய்தமை
  • சூதாட்டம் செல்லல்
  • கர்ணன் தன் சகோதரன் என அறிதல்
  • பீஷ்மர் கொல்லப்படுதல்
  • முடிவுரை

முன்னுரை

“அறம் வெல்லும் மறம் அழிவினைத் தரும்”, “அவரவர் நல்வினை தீவினைக்கேற்ப நன்மை தீமைகள் விளையும்”, “தீமையைக் கொண்டு தீமையை அகற்ற இயலாது” என்கின்ற உன்னதமான படிப்பினைகளை வழங்கும் உன்னத காவியம் மகாபாரதம் ஆகும்.

எல்லா காலத்து மக்களையும் அறிவூட்டும் வகையில் அமைந்த மதிப்பு மிக்க படைப்புக்களில் இதுவும் ஒன்றாகும். ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான மனிதநேயம் மற்றும் நெறிமுறைகளை கற்றுக் கொள்ள இது உதவுகிறது.

இந்தக் காவியத்தில் பஞ்சபாண்டவர்கள் பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொண்டு அவற்றை வெற்றி கண்டு தமது வாழ்வை சிறப்புற நடத்தி உத்தம புருசர்களாக திகழ்கின்றனர் என்பதை கூறுகின்றது.

அந்தவகையில், இந்த கட்டுரையில் பாண்டவர்கள் எதிர் நோக்கிய ஐந்து சிக்கலான சூழ்நிலைகள் பற்றி நோக்குவோம்.

பஞ்ச பாண்டவர் என்போர்

பஞ்சபாண்டவர் என்போர் பாண்டுவின் ஐந்து புதல்வர்களான தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் ஆவர்.

மகாபாரதத்தை இயற்றியோர்

வடமொழியிலே மகாபாரத கதையினை வியாசர் கூற விநாயகப் பெருமான் எழுதி முடித்தார் என மகாபாரதம் கூறுகின்றது.

தமிழ் மொழியில் பாரதக் கதையினை இற்றைக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன், திருமுனைபாடி நாட்டிலே, சனியூரில் வீரராகவச்சாரியார் என்பவருக்கு மகனாகப் பிறந்த வில்லிபுத்தாழ்வார் பாடியுள்ளார்.

அரக்கு மாளிகைக்கு தீ வைத்தல்

சகுனியினதும் துரியோதனதும் சூழ்ச்சிக்கேற்ப குங்கிலியம், மெழுகு, நெய், கொழுப்பு, அரக்கு என்பவற்றோடு மண்ணையும் கலந்து கட்டப்பட்ட அரண்மனையில் பஞ்ச பாண்டவர்களும், அவரது தாயாரும் ஒரு வருடகாலம் தங்கி வாழ்ந்தனர்.

அதன் பின்னர் இந்த அரண்மனை தங்களை கொலை செய்ய கட்டப்பட்டது என்பதை அறிந்து அந்த அரண்மனைக்கு தீயிட முன்னர் தப்பித்தமை.

திரௌபதையை திருமணம் செய்தமை

அர்ஜுனன் போட்டியில் பங்கு பற்றி திரௌபதியை மணமுடித்து இல்லம் வந்தபோது தியானத்திலிருந்து பஞ்சபாண்டவர்களது அன்னை, அர்ஜுனனின் மனைவியை அழைத்து வந்துள்ளான் என்பதனை அறியாது “ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று கூறியதை ஏற்று ஐவரும் திரௌபதையை மணக்க வேண்டிய கடட்பாட்டுக்கு உட்பட்டவை.

சூதாட்டம் செல்லல்

இராஜசூய யாகத்தை விமர்சையாக பஞ்சப்பாண்டவர்கள் கொண்டாடியதை கண்டு, துரியோதனன் அவர்கள் மீது பொறாமை கொண்டான்.

பஞ்சபாண்டவர்களை எவ்வாறாவது அவமானம் செய்ய திட்டம் தீட்டி சூக்குமமாக பஞ்சபாண்டவர்களை தம் அரண்மனைக்கு அழைத்து சூதாட்டம் விளையாட செய்து, சூழ்ச்சி மேற்கொண்டு அவர்களை தோல்வி அடைய செய்து சொத்துக்களை கைப்பற்றி மானபங்கம் செய்தனர். சூது விளையாடுதல் தவறு என்பதை அறிந்தும் அதில் ஈடுபட்டமை.

கர்ணன் தன் சகோதரன் என அறிதல்

குருஷேத்திர போரில் துரியோதனனின் நண்பனாக துணை நின்ற கர்ணனை வதம் செய்து அவனது உயிர் பிரியும் தருவாயில் கர்ணன் தான் பஞ்சபாண்டவர்களின் மூத்த சகோதரன் என்ற உண்மையை அறிதல். தம்முடைய உடன் பிறந்த சகோதரனை வதம் செய்து விட்டதை எண்ணி மனம் உடைந்தமை.

பீஷ்மர் கொல்லப்படுதல்

குருசேத்திரப் போரின் பத்தாம் நாள் பிதாமகரான பீஷ்மர் அர்ஜுனனின் அம்புகள் தொலைத்து உயிர் நீத்தமை. பீஷ்மர் பஞ்சபாண்டவர்களுக்கு பிதாமகராகவும் சிறந்த நலன் விரும்பியாக காணப்பட்ட போதிலும் யுத்த விதிமுறைக்கு அமைவாக அவரை வதம் செய்ய வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு பஞ்சபாண்டவர்கள் உள்ளாகியிருந்தமை.

முடிவுரை

இவ்வாறு மகாபாரத காவியத்திலே பஞ்சபாண்டவர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு அவற்றில் வெற்றி கண்டு நீங்காத நீதியை நிலைநாட்டியுள்ளார்கள். இவை காலங்கள் தோறும் நின்று சிறந்த அற கருத்துக்களை தற்கால வாழ்வியலுக்கு உதவும் வகையில் எடுத்துக் கூறுகிறது.

You May Also Like:

அச்சம் தவிர் கட்டுரை

கல்வி பற்றிய பேச்சு போட்டி