நிறைவு போட்டி என்றால் என்ன

நடைமுறைப் பேச்சு வழக்கில் அங்காடி அல்லது சந்தை என்ற சொல்லைப் பொருட்களை வாங்குபவர்களும் விற்கின்றவர்களும் கூடுகின்ற ஓர் இடத்தைக் குறிக்கப் பயன்படுத்துகின்றோம்.

பிரெஞ்சுப் பொருளியலறிஞரான கோர்னாட் “பொருளியளாளர்கள் அங்காடி என்னும் சொல்லால் பொருட்கள் வாங்கப்படுகின்ற விற்கப்படுகின்ற எந்தத் தனியொரு இடத்தையும் குறிப்பிடுவதில்லை. ஆனால் வாங்குவோரும் விற்பவர்களும் ஒருவரோடு மற்றவர் சுதந்திரமாகத் தொடர்பு கொள்ளக்கூடிய வட்டாரத்தைக் குறிக்கும்” என்கின்றார்.

அங்காடியின் வகைகள்

அங்காடியானது பல வகைகளில் உள்ளது. இது

  1. நிலத்தின் அடிப்படையில் அங்காடி
  2. காலத்தின் அடிப்படையில் அங்காடி
  3. பண்டத்தின் அளவின் அடிப்படையில் அங்காடி
  4. போட்டியின் அடிப்படையில் அங்காடி

எனப் பல வகைகளில் அங்காடிகளின் வகைகள் பிரிக்கப்படுகின்றன.

போட்டியின் அடிப்படையில் அங்காடியானது ஐந்து வகையான அங்காடியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது,

  1. நிறைவுப் போட்டி அங்காடி (Perfect Competition)
  2. நிறை குறை போட்டி அங்காடி (Imperfect Competition)
  3. முற்றுரிமை (Monopoly)
  4. இரட்டை உரிமை (Duopoly)
  5. சிலர் உரிமை நிலை (Oligopoly)

நிறைவு போட்டி என்றால் என்ன

ஒரு கட்டுக்கோப்பான ஆனால் கற்பனை அங்காடியாகும். ஓர் அங்காடி முழு அளவில் போட்டி நிலவுமானால் அதனை நிறைவுப் போட்டி அங்காடி என அழைப்பர். 100% சதவீதமான நிறைவு போட்டியை காண்பது என்பது அரிதானதாகும்.

நிறைவுப் போட்டியின் இயல்புகள்

நிறைவுப் போட்டி அங்காடியில் எண்ணற்ற வாங்குபவர்கள் மற்றும் விற்போர்கள் காணப்படுவார்கள். வாங்குபவர்கள் ஒவ்வொருவரும் சிறிய அளவிலேயே வாங்குவர். விற்பவர்களும் தனித்தனியாக சிறிய அளவிலேயே விற்பனை செய்வர். இதனால் எந்தத் தனிப்பட்ட வாங்குவோரோ விற்பவரோ அங்காடி விலையை மாற்ற முடியாது.

இங்கு விற்பனை ஆகும் பண்டங்கள் ஒரே மாதிரியானவையாகவும், ஒரே இயல்பாகவும் இருக்கும். அனைத்து உற்பத்தி பண்டங்களும் அளவு, வடிவம், தரம் போன்றவற்றில் ஒரே மாதிரியாக இருக்கும் இதனால்தான் அங்காடியில் ஒரே மாதிரியான விலை நிலவும்.

உட்புகுதல் மற்றும் வெளியேறுதலில் தடை இல்லை. (Free entry and Free exit) தனி நிறுவனங்களுக்கு அந்தத் தொழிலில் நுழையவும் வெளியேறவும் முழுமையான சுதந்திரம் இருக்கும்.

வாங்குவோரும், பிற்போரும் அங்காடி பற்றி முழுமையாக அறிந்திருப்பார்கள்.

அரசினுடைய தலையீடு காணப்படாது. குறிப்பாக மூலப்பொருள் அளவு மற்றும், விலை நிர்ணயம் போன்றவற்றில் அரசின் தலையீடு இல்லை.

உற்பத்திச் சாதனங்கள் தடையற்ற இடப்பெயர்ச்சி (Factors of Production on free modulation). நிறைவுப்போட்டி செவ்வனே செயற்பட உற்பத்திக் காரணிகள் எங்கு அதிக ஊதியம் கிடைக்குமோ அங்கு இடம்பெயர்ந்து செல்லத் தடைகள் இருக்கக் கூடாது. அதேபோல் ஒரு தொழிலை விட்டு வெளியேறவும் அவற்றிற்குத் தடைகளற்ற நிலை இருக்க வேண்டும்.

விலையில்லா அங்காடி தீர்மானித்தல் (Price determination in the Market. demand and supply are equal)

நிறைவுப் போட்டி நிலவ போக்குவரத்துச் செலவு இருக்கக் கூடாது. உற்பத்தி நிறுவனங்கள் நெருங்கிய சூழ்நிலையில் செயல்பட வேண்டும்.

You May Also Like:

நற்செயல் என்றால் என்ன

கலால் வரி என்றால் என்ன