தொல்காப்பியம் தோன்றிய காலம் தொட்டு பாரதியார் கவிதை பிறந்த தலைமுறை வரை ஒவ்வொரு நூற்றாண்டிலும் வாழையடி வாழையாக கணக்கற்ற புரட்சி பெருவிரல்கள் தமிழ் மண்ணிலே தோன்றியுள்ளனர். அத்தகைய பெருவீரர்களுள் மருது பாண்டியர்களும் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
மருது பாண்டியர் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- மருது பாண்டியர்கள் சிவகங்கை சீமைக்கு வந்த விதம்
- ஆட்சி பொறுப்பு
- தூக்குத் தண்டனை
- நினைவிடம்
- முடிவுரை
முன்னுரை
இந்தியாவுக்கு வர்த்தக நோக்குடன் வந்த ஆங்கிலேயர்கள் இந்திய நாட்டை முழுவதுமாக உரிமையாக்கி பல இன்னல்களை மக்களுக்கு ஏற்படுத்தினர்.
இவர்களை தமிழ் மண்ணில் இருந்து விரட்ட 1785 முதல் 1801ஆம் ஆண்டு வரை ஆயுதம் தாங்கி போராடியவர்களாக பெரிய மருது, சின்ன மருது எனப்படும் மருதுபாண்டியர்கள் காணப்படுகின்றனர்.
ஆரம்ப வாழ்க்கை
ஆங்கிலேயருக்கு எதிரான வீர முழக்கத்தை ஏற்படுத்திய மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் இவர்கள் இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குலம் என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த மொக்க பழனி அப்பன் என்பவருக்கும், ஆனந்தாயி என்று அழைக்கப்படுகின்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748 ஆம் ஆண்டு பிறந்தவர் பெரிய மருது பாண்டியர் ஆவார்.
இவருக்குப் பின் ஐந்து ஆண்டுகள் பின்னர் 1753 சின்ன மருது பாண்டியர் பிறந்தார். இவர்கள் இருவரும் சிறுவயதில் இருந்தே வீரமிக்கவர்களாகவும், துணிவு நிரம்ப பெற்றவர்களாகவும் காணப்பட்டனர்.
மருது பாண்டியர்கள் சிவகங்கை சீமைக்கு வந்த விதம்
ஒரு நாள் அரசர் விஜயரகுநாத கிழவன் சேதுபதி வேட்டையின் பின்னர் ஆறுமுகம் கோட்டைகள் தங்கி இருந்தார். அப்பொழுது சிவகங்கை சீமையின் அரசரும், அவரது மருமகன் முத்து வடுகநாதவேரும், அரசி வேலுநாச்சியாரும் அங்கு வந்தனர்.
தமது அரசியல் அமைச்சரான தாண்டவ ராஜா பிள்ளைக்கும், தளபதியான சுப்பிரமணிய தேவருக்கும் வயதாகி விட்டதாகவும், அவர்களுக்குப் பின்னர் நாட்டை திறமையுடன் ஆட்சி செய்வதற்கான இளவல்களை தேடும் தருணத்தில் மருது பாண்டியர்களின் வீரத்தையும் திறமையும் அறிந்து அவர்களை சிவகங்கைக்கு 1761 ஆம் ஆண்டு அழைத்து வந்தனர்.
ஆட்சி பொறுப்பு
வேலுநாச்சியார் தனது கணவனை இழந்தப் பின்னர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மேற்கொண்ட போராட்டத்தில் முக்கிய பங்கினை வகித்தவராக மருது பாண்டியர்கள் காணப்பட்டனர்.
வேடன் நாச்சியார் சிவகங்கை சீமையை சிறப்புற ஆட்சி செய்து வந்தார். சிறிது காலத்தின் பின் போலே நாச்சியார் நோய்வாய்ப்பட்டவராக காணப்பட்ட நிலையில் அவருக்கு ஆண்மகவு ஏதும் காணப்படாத காரணத்தால் தன்னுடைய இறப்பின் பின்னர் பெரிய மருது சிவகங்கை நாட்டின் மன்னராகவும் சின்ன மருதுவை அமைச்சராகவும் பொறுப்பு எடுக்கும் படி வலியுறுத்தினார்.
அவர்களும் ஒப்பு கொண்டனர். 1696 ஆம் ஆண்டு வேலுநாச்சியாரம் இறந்துவிட மருது பாண்டிய சகோதரர் இருவரும் தமக்குரிய பொறுப்பை ஏற்று நாட்டை சிறப்புற ஆட்சி செய்தனர்.
தூக்குத் தண்டனை
வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் வழங்கியதாக காரணம் கூறி 1801 ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி அன்று ஆங்கிலேயர் மருதுபாண்டியருக்கு எதிராக போர் தொடுத்தனர்.
இந்த போரானது 150 நாட்கள் வரை இடைவிடாமல் தொடர்ச்சியாக நடைபெற்றது. பின்னர் குண்டடிபட்ட சின்ன மருதுவும் பெரிய மருதுவும் ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு 1801 அக்டோபர் மாதம் 24 ஆம் திகதி திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிடப்பட்டனர்.
நினைவிடம்
மருது சகோதரர்களை நினைவாக அவர்கள் இருவரின் முழு உருவ கற்சிலைகள் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் காளீஸ்வரர் கோயிலின் உட்புறமும், மருது சகோதரர்களின் சமாதி காளிஸ்வரர் கோயிலின் எதிர் புறமும் அமைக்கப்பட்டுள்ளன.
முடிவுரை
வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தில் மருத பாண்டியர்கள் விளங்குகின்றனர். வீரம் என்பதை பொருளாகவும் நன்றி என்பதற்கு விளக்கமாகவும் இவர்கள் உள்ளனர்.
இவர்கள் இருவரும் தியாகிகள் என்பதாலும் அவர்களுக்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 24 ஆம் திகதியும் 27ஆம் தேதி முறையே தமிழ்நாடு அரசு விழாவாக திருப்பத்தூரிலும், சமுதாய விழாவாக காளையார் கோவிலிலும் கொண்டாடப்பட்டு வருவது இயற்கை அன்னை மருது பாண்டியர்களுக்கு வழங்கிய பெருமையாக காணப்படுகிறது.
You May Also Like: