இந்த மூன்றாம் பிறை நாளில் சந்திர பகவான் வழிபாடானது சிறப்பாக இடம்பெறும். இந்நாளில் பல்வேறு சுபகாரியங்கள் நடந்தேறுவதோடு மன அமைதியும் கிட்டும்.
மூன்றாம் பிறை என்றால் என்ன
மூன்றாம் பிறை என்பது சூரியன் மற்றும் சந்திரனானது ஒரே நேர் கோட்டில் அமையப் பெறுவதோடு மாத்திரமல்லாது ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் நாளானது துவித திகதியில் வெளிப்படும் நிலவே மூன்றாம் பிறையாகும்.
இதனை சந்திர தரிசனம் அல்லது பிறை தரிசனம் என அழைப்பர். மேலும் வானில் தோன்றும் மூன்றாம் பிறை நிலவை தரிசிப்பதையே மூன்றாம் பிறை எனக் கூறுகின்றனர்.
இந்த மூன்றாம் பிறையானது சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் சூடும் தெய்வீக சின்னமாகும்.
மூன்றாம் பிறை உருவான வரலாறு
தட்சன் என்பவனுடைய சாபத்தின் காரணமாக சந்திரன் தனது கவலைகளை இழந்தான், மேலும் சந்திரன் தனது கவலைகளை மீண்டும் பெறுவதற்காக சிவனை நினைத்து தியானம் செய்தான்.
தட்சனுடைய சாபத்தால் உருகும் சந்திர பகவானை நினைத்து அவனது இருபத்தேழு நட்சத்திர மனைவியர் மிகுந்த வருத்தமடைந்தனர்.
இதன் காரணமாக அவர்களுடைய தந்தையான தட்சனிடம் சென்று சாபவிமோசனம் அளிக்கும் படி வேண்டினர். தட்சன் தனது அறியாமையின் காரணமாக அளித்த சாபத்தினால் தன்னுடைய புண்ணியம் அனைத்தும் குறைந்து விட்டது. எனவே தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்று கூறினார்.
இருபத்தேழு நட்சத்திர மனைவியரும் சிவ பெருமானை நினைத்து தவம் புரிந்தனர். சந்திரனின் தவத்தை மெச்சிய சிவ பெருமான் தன்னுடைய தலைமுடியில் மூன்றாம் பிறையாக அமரும் பேற்றினை வழங்கினார்.
இதன் காரணமாகவே சிறுக சிறுக வளர்வதன் மூலம் முழுப்பலனையும் அடைய முடியும் எனும் கருத்தை வலியுறுத்துவதோடு இந்த பிறையை தரிசிப்பதன் மூலம் சந்திரன் மற்றும் சிவ பெருமானுடைய அனுகிரகத்தை பெற முடியும்.
மூன்றாம் பிறை தரிசனத்தின் நன்மைகள்
மூன்றாம் பிறை தரிசனத்தினை மேற்கொள்வதன் மூலம் ஆயுளானது விருத்தியடையும். மேலும் ஞாபகசக்தியானது அதிகரிக்க கூடும், மனக்குழப்பம் நீங்கும்.
சந்திர தரிசனம் செய்பவர்களுக்கு இடது கண்ணில் பார்வை கோளாறுகள் இருந்தால் நிவர்த்தி செய்யப்படும். மேலும் கண் பார்வை தெளிவடையும்.
திங்கட்கிழமையுடன் மூன்றாம் பிறை வரும்போது சோமாவாரம் என கூறுவர். திங்கட்கிழமையை அந்த சோமவாரத்தில் வரும் மூன்றாம் பிறையை பார்த்துவிட்டால் வருடம் முழுவதும் சந்திரனை வணங்கிய பயன் கிட்டும்.
மூன்றாம் பிறையானது தெய்வீகமான பிறையாகும். அதனை பார்த்தாலே மனக்குழப்பம், மனக்கஸ்டம், வருத்தம் போன்றவை நீங்கும். மேலும் ஆயுள் காரகரான சனிபகவானின் நாளில் சந்திர தரிசனம் செய்தால் ஆயுள் விருத்தி ஏற்படுவதோடு, புணர்வு தோஸம் நீங்கும்.
மன அமைதி, உடல் ஆரோக்கியம் பெறும். தம்பதிகளாக இத்தரிசனத்தில் ஈடுபடும்போது தம்பதியினரிடையே ஒற்றுமை ஏற்படும்.
மேலும் பிரமகத்தி தோஷங்கள் நீங்கும். ஒரு வருடம் முழுவதும் சந்திர தரிசனம் மேற்கொண்டவர்கள் அவர்களின் இறப்பின் பின் சொர்க்கம் அடைவர் என்பது ஐதீகம் ஆகும்.
மூன்றாம் பிறை வழிபாட்டு முறைமை
மூன்றாம் பிறை நாளில் மாலை 6 மணி தொடக்கம் 6:30 மணிக்குள் இவ்வழிபாடு இடம் பெறுகின்றது. சந்திரனை சந்திக்கும் போது கையில் பணம் வைத்து மூடிக்கொண்டு வலமாக சுற்றி மீண்டும் ஒரு பிறையை தரிசித்து வழிபாட்டினை மேற்கொள்வர்.
ரோகினி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சந்திர தரிசனம் செய்தால் வாழ்நாள் முழுவதும் வாழ்வில் சிறப்பு பெற்று விளங்குவார்கள். ஒருவருக்கு சந்திர தோஷம் இருக்குமேயானால் மூன்றாம் பிறை நாளன்று விரதமிருந்து சந்திர தரிசனம் செய்தல் வேண்டும். இதனூடாக தோஷமானது நீங்கும்.
You May Also Like: