ஆயுள் காப்பீடு என்றால் என்ன

எதிர்பாராத விதமாக இழப்புக்களை சந்திப்பது என்பது மிக அரிதாகவே காணப்படுகின்றது என குறிப்பிடலாம். இத்தகைய சந்தர்ப்பம் ஏற்படுகின்றபோது எமது குடும்பத்தை காப்பாற்றுவதற்கு ஆயுள் காப்பீடானது துணைபுரியும்.

அதாவது எமது குடும்பத்தின் நிதி சார்ந்த முறையினூடாக எமது குடும்பத்தை பாதுகாக்கின்ற ஒரு வழிமுறையாகும்.

ஆயுள் காப்பீடு என்றால் என்ன

ஆயுள் காப்பீடு என்பது ஒரு நிறுவனத்தின் விதிகளுக்கு உட்பட்ட வகையில் ஒரு தனிமனிதன் ஒப்பந்தம் செய்வதினூடாக மேற்கொள்கின்ற ஒரு முறைமையாகும்.

அதாவது ஒரு காப்பீட்டாளர் திடீர் என இறந்து போகும் சந்தர்ப்பங்களில் அவருக்கு நிதி சார்ந்த உதவிகளை மேற்கொள்ளும் முறையினையே ஆயுள் காப்பீடு எனலாம். ஓர் ஆயுள் காப்பீட்டினை மேற்கொண்டவர் திடீரென இறந்த பின்னர் அவரது நிதி சார்ந்த விடயங்களை அவருடைய குடும்பத்தினர் பெற்றுக் கொள்வார்கள்.

ஆயுள் காப்பீட்டின் நன்மைகள்

ஆயுள் காப்பீட்டின் நன்மைகளுள் ஒன்றாக ஆயுள் காப்பீடு செய்த ஒருவர் இறந்து போகும் சந்தர்ப்பத்தில் அவருடைய கடன்களை அடைப்பதற்கு இக்காப்புறுதியானது துணைபுரிகின்றது எனலாம்.

குடும்பத்தில் அவர் இறக்கும் பட்சத்தில் குடும்பத்தினை நிதி சார்ந்த செயற்பாட்டினூடாக உதவுகின்றது. அதாவது இறந்தவருடைய குடும்பத்தினருடைய தேவைகளை இதனூடாக தீர்த்துக் கொள்ளமுடியும்.

ஆயுள் காப்பீட்டின் மூலமாக பல்வேறு இலாபங்களை பெற்றுக்கொள்ள முடியும். இதனூடாக எம்முடைய குடும்ப செலவுகளினை நிவர்த்தி செய்து கொள்ளமுடிகிறது.

ஆயுள் காப்பீடானது எதிர்காலம் பற்றிய ஒரு உறுதியினை எமக்கு வழங்குகின்றது. அதாவது காப்பீட்டாளர் ஒரு சிறு தொகையினை இதற்காக முதலீடு செய்வார். இது இழப்புக்கள் நேரிடும் பட்சத்தில் எம்மை பாதுகாப்பதாக அமைகின்றது.

ஒரு நிறுவனத்தினுடைய மூலதன இழப்பிலிருந்து எம்மை பாதுகாக்க கூடியதாக ஆயுள் காப்பீடானது அமைந்து காணப்படுகின்றது. அதாவது வணிக ரீதியானவற்றில் வருமானம் மற்றும் இலாபத்தை ஏற்படுத்துகின்றது.

சமூகத்திற்கு ஏற்படும் அழிவு மற்றும் பல்வேறு இழப்பை குறைப்பதற்கு ஆயுள் காப்பீடானது துணை புரிகின்றது. அதாவது நிதியை பயன்படுத்துவதன் ஊடாக வர்த்தகத்தை மேம்படுத்துகின்றது.

ஆயுள் காப்பீடானது சேமிப்பு பழக்கத்தினை ஒரு தனிநபரிடத்தில் உண்டு பண்ணுகின்றது. எமது வருவாயில் ஒரு பகுதியினை இதற்காக செலுத்த வேண்டும் என்ற நோக்கில் சேமித்து வைக்கப்படுகின்றது. இதனூடாக சேமித்தலானது இலகுவாக இடம்பெறும்.

ஆயுள் காப்பீடானது மன அமைதிக்கு வழிவகுக்கின்றது. அதாவது திடீரென காப்பீட்டாளர் இறந்துவிட்டார் எனில் அவரது குடும்பத்தில் போதியளவு வருமானம் மற்றும் ஏனைய செலவீனங்களுக்கு மிகவும் இறுக்கமான ஒரு சூழ்நிலை ஏற்படும். இதனால் மனரீதியில் மிகவும் பலயீனமான ஒருவராகவே காணப்படுவர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் காப்பீடானது துணைபுரியும்.

ஆயுள் காப்பீட்டின் அவசியம்

இழப்பு ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் அந்த இழப்புக்கங்களிலிருந்து எமது குடும்பத்தினை காப்பதற்கு ஆயுள் காப்புறுதியானது அவசியமாகின்றது. அதாவது இதனூடாக எதிர்காலம் பற்றிய அச்சமில்லாது செயற்படமுடியும்.

வருமானம் ஈட்டும் ஒருவருக்கு குடும்பம், பிள்ளைகள் என பல தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பு காணப்படுகின்றது. இவ்வாறான சூழலில் அந்த நபர் இறந்துவிட்டால் குடும்பத்தின் நிலையானது கவலைக்கிடமாகவே காணப்படும்.

எனவே இவ்வாறான சூழலில் இருந்து பாதுகாப்பு பெற ஆயுள் காப்புறுதியானது துணை புரிகின்றது.

மேலும் கடன் மற்றும் சொத்துக்களில் அடமானம் போன்றவற்றை பெற்றிருந்தால் அதனிலிருந்து எம்மை காத்துக்கொள்ள இக்காப்பீடு அவசியமாகின்றது.

You May Also Like:

பொது சிவில் சட்டம் என்றால் என்ன

பணியிடை நீக்கம் என்றால் என்ன