பழங்குடி மக்களின் சமூக, பொருளாதார, கல்வி பிரச்சினைகளை மேம்படுத்துவதை நோக்காக கொண்டு இந்த உண்டு உறைவிட பள்ளிகள் செயற்பட்டு வருகின்றன. இந்த பள்ளியில் மாணவர்கள் தங்கி கற்கக் கூடியவர்களாக காணப்படுவர்.
உண்டு உறைவிட பள்ளி என்றால் என்ன
உண்டு உறைவிட பள்ளி என்பது தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளே உண்டு உறைவிட பள்ளி ஆகும்.
இவை பழங்குடி மக்களுடைய கல்வி வளர்ச்சியை பொதுப்பிரிவினர் அளவிற்கு இணையாக கொண்டுவர அரசால் எடுக்கப்படும் ஓர் முயற்சியாகும்.
உண்டு உறைவிட பள்ளியின் முக்கியத்துவம்
உண்டு உறைவிட பள்ளியானது குழந்தைகளின் கல்வி நலனில் கவனம் செலுத்தி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஏற்படுத்தப்பட்ட பள்ளிகளாக காணப்படுகின்றமை இதன் முக்கியத்துவத்தினை விளக்குகின்றது.
உண்டு உறைவிட பள்ளியில் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையினால் மாணவர்கள் அப்பள்ளியில் தங்கி கொண்டே தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
உண்டு உறைவிட பள்ளியானது அனுபவ அடிப்படையிலான கற்றலுக்கு தனித்துவ முக்கியத்துவத்தினை வழங்குகின்றது. கற்றலுக்கான ஒரு சிறந்த வாய்ப்பினை வழங்கக் கூடியதாக உண்டு உறைவிட பள்ளியானது காணப்படுகிறது.
உண்டு உறைவிட பள்ளியில் கற்கும் மாணவர்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களை விட நேர மேலாண்மை கொண்டவர்களாக காணப்படுவது என்பது இந்த உண்டு உறைவிட பள்ளியின் முக்கியத்துவமாகும்.
கற்றலுக்கு உகந்த சூழலை உருவாக்க கூடியதாகவும் கல்விரீதியில் வளர்ச்சியடையாத மாணவர்களுக்கான ஒரு சிறந்த வழிகாட்டலை வழங்கும் ஓர் இடமாகவும் உண்டு உறைவிட பள்ளியானது திகழ்கின்றது.
பழங்குடியினரும் உண்டு உறைவிட பள்ளியும்
பழங்குடியை சேர்ந்த மக்கள் குறிப்பிட்டளவு கனிசமான தொகையினை உடையவர்களாகவே காணப்படுகின்றனர். அதாவது இந்திய மக்கள் தொகையில் சுமார் 8 சதவீதம் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் எழுத்தறிவு வீதம் 54 சதவீதமாகவே காணப்படுகின்றன.
இவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்கு மிக முக்கியமானதொரு தளமாகவே உண்டு உறைவிட பள்ளி முறைமை காணப்படுகிறது.
பழங்குடி மக்கள் பிழைப்பு தேடி அவ்வப்போது பல சமவெளி பகுதிகளுக்கு செல்கின்றனர். அங்கு கரும்பு வெட்டுதல், மூங்கில் வெட்டும் பணி என பல பணிகளுக்கு செல்கின்றனர். அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் தங்களுடைய குழந்தைகளை அழைத்து செல்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர்.
இவ்வாறான குழந்தைகளுக்கு கல்வி ரீதியாக உதவுவதற்காகவே இந்த பள்ளிமுறைமை அமைந்துள்ளது. இந்த உண்டு உறைவிட பள்ளிகளில் பலர் கல்வி பயில்கின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் மட்டுமே 5க்கும் மேற்பட்ட உண்டு உறைவிட பள்ளிகள் காணப்படுகின்றன. மேலும் 1952ம் ஆண்டின் தொடக்க பள்ளியாக இருந்து 1988ம் ஆண்டில் உயர்நிலை பள்ளியாக இது தரம் உயர்த்தப்பட்டது.
இவ்வாறாக உண்டு உறைவிட பள்ளிகள் பழங்குடியின மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும் சில இடங்களில் விடுதி வசதியும் அதற்கான கட்டடங்களும் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.
எனவேதான் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அவர்களது சமூக பொருளாதார கலாச்சார வாழ்நிலையில் இருந்து மதிப்பீடு செய்து சிறந்த உண்டு உறைவிட பள்ளியை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் பழங்குடியினரது வாழ்வில் மாற்றத்தினை ஏற்படுத்த இது துணைபுரிவதோடு உண்டு உறைவிட பள்ளிக்கு தரமான கல்வியை வழங்குவதினூடாக இம்மக்கள் தமது வாழ்வில் சிறந்த எதிர்காலத்தை அடைந்து கொள்வதற்கும் இது துணை புரிகின்றது.
You May Also Like: