ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து?-உண்மை இது தான்!-பயில்வான்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர்களில் ஜெயம் ரவியும் ஒருவர். ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

முதல் படத்தில் தனது அபார திறமையை வெளிப்படுத்தியதை அடுத்து அந்தப் படத்தின் பெயரை இவரது பெயருக்கு முன்னால் அடைமொழியாக இணைந்து கொண்டது.  அதன் பின்னரே இவரை எல்லோரும் ஜெயம் ரவி என்று அழைக்க ஆரம்பித்து விட்டனர்.

பூலோகம், நிமிர்ந்து நில்,  தில்லாலங்கடி, சந்தோஷ் சுப்பிரமணியம் ,அகிலன்,அடங்கமறு, பேராண்மை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இவரின் சைரன் படம் வெளியானது. இதில் இவருடம் இணைந்து அனுப்பம்மா பரமேஸ்வரன், கீர்த்தி சுரேஷ்,யோகி பாபு, சமுத்திர கனி போன்றோர் நடித்துள்ளனர்.

2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்களும் உள்ளனர். இவரி மகன்களில் ஒருவர் டிக் டிக் டிக் படத்தில் நடித்தும் இருக்கிறார். தற்போது ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தியும் விவாகரத்து பெற உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இவர்களின் விவாகரத்து விடயம் குறித்து ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந் நிலையில் பயில்வான் இது குறித்து பேசியுள்ளார்.

ஆதி அவர், எந்த தயாரிப்பாளர் கதை சொல்ல வந்தாலும், ஜெயம் ரவி முதலில் மாமியாரிடம் கதை சொல்லுங்கள் அவர்கள் ஒகே என்றால், நான் கதை கேட்கிறேன் என்று சொல்லுவாராம் இதனால் கடுப்பான, தயாரிப்பாளர் யாரோ ஒருவர் கிளப்பி விட்ட கதை தான். இந்த விவாகரத்து வதந்தி இதில் கொஞ்சமும் உண்மை இல்லை என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

இவரின் மனைவி ஆர்த்தியும் இதற்கு பதிலளிக்கும் விதமாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். ஜெயம் ரவி நடித்த ஜெயம் படத்தில் இருந்து போஸ்ட் ஒன்றை பதிவிட்டு “காதல் என்பது வார்த்தை அல்ல வாழ்க்கை” வசனத்தை பதிவிட்டுள்ளார்.

more news