மூங்கில் என்பது ஒரு புல் வகையை சேர்ந்த தாவரங்களில் ஒன்றாகும். இந்த மூங்கில் மரங்களானவை மிக உயரமாக வளரக்கூடியதாகும்.
சீனா, இந்தியா, தாய்லாந்து, இந்தனேசியா போன்ற நாடுகளில் மூங்கில் உற்பத்தியானது அதிகரித்து கொண்டே வருகின்றது. மேலும் மூங்கில் மரம் 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியதாக காணப்படுகின்றமை சிறப்பிற்குரியதாகும்.
மூங்கில் வேறு சொல்
- வேரல்
- வேய்
- வேணு
- ஆம்பல்
- கண்டகி
- கனை
- தட்டை
- பணை
- கழை
மூங்கிலின் பயன்கள்
இன்று மூங்கிலின் பயன்களானவை எண்ணிலடங்காதவைகளாக காணப்படுகின்றன. அதாவது குடிசை வீடுகளை கட்டுவதற்கான மரமாகவும், கைவினை பொருட்களை செய்யவும், தளபாடங்களை செய்யவும், காகித தொழிற்சாலைகள் மற்றும் மரக்கூழ் செய்யவும் பயன்படுத்தப்பட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது.
தளபாட உற்பத்தியில் மூங்கிலின் பங்கு
மூங்கில் மரங்களை வெட்டி அதனிலிருந்து தளபாடங்கள் தயாரிக்கப்படுகின்றமை அண்மைக்காலமாக அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. அந்தவகையில் கதிரைகள், கட்டில், மூங்கில் தட்டு, மூங்கில் கூடை என பல்வேறு வகையான வீட்டு தளபாடங்களின் உற்பத்திக்கு மூங்கில்கள் உறுதுணையாக அமைகின்றன.
You May Also Like: