தனுஷின் ராயன் பட ரிலீஸ் திகதி!- புதிய அறிவிப்பு

தமிழ் சினிமாவில் நடிப்பாலும்,நடனத்தாலும் ரசிகர்களை கவரும் நடிகர்களில் தளபதி விஜய்க்கு பின்னர் தனுஷ் தான். இவர் நடிகராக மட்டுமல்லாது இயக்குனராக, பாடகராக என பல பணிகளை ஆற்றி வருகின்றார்.

இவர் இயக்கத்தில் முதல் முதல் வெளிவந்த படம் பா. பாண்டி. இந்த படத்தின் வெற்றி தனுஷிற்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. தற்போது மீண்டும் அவரது இயக்கத்தில் ராயன் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கேமியோ கேரக்டரில் அவர் நடித்துள்ளார்.

இவருடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வந்தாலும் இவர் தனது நடிப்பில் கவனம் சிதறாமல் நடித்து வருகின்றார்.தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்தை அறிந்த இவரின் ரசிகர்கள் சினிமாவில் வெற்றி கண்ட உங்களுக்கு வாழ்க்கை கி கொடுக்கவில்லை என்று சோகத்தில் உள்ளனர்.

கர்ணன், அசுரன் போன்ற வெற்றி படங்களை கொடுத்த இவருக்கு இறுதியாக வெளியான கேப்டன் மில்லர் படம் கி கொடுக்க வில்லை. இருப்பினும் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அருண் மாதேஸ்வரன் – தனுஷ் கூட்டணியில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். சத்யஜோதி தியாகராஜன் தயாரித்துள்ளார். ஜி. வி பிரகாஷ் இசையமைத்தும் இருப்பார்.

இப்படத்தில் தனுசுடன் இணைந்து சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷான் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நடந்த கதையாகும். ஆங்கிலேயர்களின் கட்சியில் இணைய வேண்டும் என்று ஆசைப்பட்டு அவர்களுடன் இணைந்து அனைத்து பயிற்சிகளையும் கற்றுக்கொள்ளக்கின்றார்.

பின் இந்தியா மக்களை கொள்ளும் படி ஆங்கிலேயர்களிடம் இருந்து கட்டளை வருகின்றது. அவர் சற்று தயங்கினார். பின் அவர்களை கொள்கின்றார். தன் மக்களை கொன்ற குற்ற உணர்ச்சியில் ஆங்கிலய படை தளபதியை கொள்கின்றார்.

இவரை தற்போது ஆங்கிலேய படை தேடி வருகின்றது. மில்லராக இருந்த இவர் கேப்டன் மில்லராக மறுகின்றார். இவர் ஏணி எதிர்கொள்ளபோகும் பிரச்சனைகளே படமாக்கபட்டுள்ளது.

தற்போது இங்கிலாந்தில் நடைபெற உள்ள 10வது சர்வதேச திரைப்பட விழாவில் கேப்டன் மில்லர் திரைப்படம் போட்டிக்கு தேர்வாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வேறு எந்தக தமிழ் திரைபடமும் தெரிவாகவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.இது இவருக்கு கிடைத்த வெற்றி என்று கூறலாம்.

தற்போது இவரின் ராயன் பட ரிலீஸ் திகதி பற்றிய புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படம் ஆரம்பத்தில் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. தேர்தல் காலம் என்பதால் பின் ஜூன் மாதம் வெளியாகுவதாக அறிவிகபட்டது. தற்போது ஜூலை மாதம் வெளியாக உள்ளதாக அறிவிப்பிக்கள் வெளியாகியுள்ளது.

ராயன் படத்தில் தனுஷுடன் சந்தீப் கிஷன், காளிதாஸ், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், துஷாரா விஜயன், அபர்ணா முரளி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

தனுஷ் இயக்குவதால் இந்த படத்திற்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றது. படத்தின் ரிலீஸ் திகதி தள்ளி போவதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

more news