சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஸ்மிகா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் சிவகார்த்திகேயனு ஒருவர். இவர் இறுதியாக நடித்த அயலான் படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. மற்றும் இப் படத்திற்கு இவர் சம்பளமே வாங்காமல் நடித்துள்ளார்.

அயலான் படத்திற்கு முன்பு வெளியான டான் படம் இவரின் வாழ்க்கையை நேர்படுத்தியது. அதன் பின் நடித்த மாவீரன் படமும் இவருக்கு வெற்றியை கொடுத்தது.

இவ்வாறு இருக்க இடையில் இவர் பற்றிய தவறான கருத்துக்கள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. அதாவது டி. இமான் தான் தனது மனைவியை விவாகரத்து செய்ததற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று கூறி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இவ் விவகாரம் பெரிதும் பேசப்பட்டது இருப்பினும் இது பற்றி சிவகார்த்திகேயன் எதுவும் பேசவில்லை. இவர்க்கு எதிராக பலர் கருத்துக்களை தெரிவித்தாலும் பலரும் இவருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வந்தனனர். இவர் வளர்ச்சியை தடுப்பதற்காகவே இவ்வாறு வதந்தி பரப்பபடட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு இருக்க தற்போது இவர் அமரன் படத்தில் நடித்து வருகின்றார். மற்றும் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்திலும் நடித்து வருகின்றார்.

இவ்வாறு இருக்க தற்போது புதிய படம் பற்றிய அப்டேட் வெளியாக்கியுள்ளது. டான் பட இயக்குனர் சிபி சக்காரவர்த்தியுடனே இணைகின்றார். இதில் இவருக்கு ஜோடியாக ராஸ்மிகா மந்தானா நடிக்கவிருக்கின்றார்.

more news