தல அஜித்தின் பிறந்தநாளுக்காக இன்று திரையரங்குகளில் அஜித்தின் படங்கள் ரீ ரிலீஸ் ஆகியுள்ளன.
திரையரங்கு ஒன்றில் அஜித் ரசிகர் ஒருவர் கில்லி பட பேனரை கிழித்து அட்டகாசம் செய்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் மங்காத்தா வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர் ஆனால் தீனா மற்றும் பில்லா இரு படங்களும் வெளியாகின.
அனைத்து திரையரங்குகளும் ரசிகர்களால் நிரம்பி வழிகின்றன. திரையரங்குகளில் பட்டாசு வெடித்து அஜித் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
ஏற்கனவே நடிகர் அஜித் தனது ரசிகர்களிடம் முதலில் உங்களது குடும்பம் உங்களுடைய வேலை அதன் பிறதுதான் என்னுடைய படம் , உங்களுக்கு விடுமுறையான காலத்தில் என்னுடைய படத்தை பார்த்தால் போதும் என்று கூறியுள்ளார்.தனக்கான ரசிகர் மன்றத்தையே கலைத்தவர்.
கடந்த இரு வாரங்களாக கில்லி படம் திரையரங்குகளில் பட்டையை கிளப்பி வந்துள்ளது. 25 கோடி வசூல் செய்து சாதனையை படைத்துள்ளது.
இந் நிலையில் சென்னையில் உள்ள காசி தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த விஜயின் கில்லி படத்தின் பேனரை கிழிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.இதனால் அஜித் விஜய் ரசிகர்களுக்கு இடையே சண்டைகள் மூண்டுள்ளன.
இதை மட்டும் அஜித் அறிந்தால் எனிமேல் தனது படங்களை ரீ ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று கண்டிஷன் போட்டு விடுவார் என ஏனைய அஜித் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.