அஜித்தின் பிறந்த நாளுக்கு ஷாலினி கொடுத்த பரிசு!-விலை என்ன தெரியுமா?

இன்று பிறந்த நாளை கொண்டாடிவரும் தல அஜித்ற்கு மனைவி ஷாலினி விலையுயர்ந்த பரிசை வழங்கியுள்ளார். இது அவருடைய 53 வயது பிறந்தநாள் ஆகும்.

அஜித்தின் பிறந்த தினமான இன்று மாங்காத்தா படம் மறு வெளியீடு செய்வதாக இருந்தது. ஆனால் பின் தீனா மற்றும் பில்லா படங்கள் வெளியிடபட்டுள்ளன.

ரசிகர்கள் அனைவரும் மாங்காத்தாவை எதிர்பார்த்தனர். இந்தியாவில் மட்டுமே மாங்காத்தா படம் வெளியாகவில்லை.

ஏனைய நாடுகளில் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

இவ் இரு படங்களும் இதுவரை 85 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

தீனா படத்தை இயக்கிய ஏ. ஆர். முருகதாஸ் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாது எதிலும் முதன்மையானவர் என்பதை தான் ‘தல’ என்கிற சொல் குறிக்கும். அந்த ‘தல’ டைட்டிலுக்கு எப்போதுமே பொருத்தமானவர் நீங்க தான் என அஜித்தை பாராட்டியும் உள்ளார்.

இவ்வாறு இருக்க அஜித்தின் மனைவி ஷாலினி விலையுயர்ந்த மோட்டார் வண்டி ஒன்றை பரிசளித்திருப்பார். அதன் விலை பல லட்சங்கள் ஆகும் என கூறப்படுகின்றது.

More News