மலையாளத்திற்குள் காலடி வைக்கும் எஸ். ஜே சூர்யா!

நடிப்பின் அரக்கன் எஸ். ஜே சூர்யா நடிகர் மட்டுமல்லாது ஒரு நல்ல இயக்குனரும் ஆவார். இவர் சமீபத்தில் மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

மார்க் ஆண்டனி படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார்.

இவர் வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அஜித்தின் நடிப்பில் வெளியான படம் மாபெரும் வெற்றியையும் வசூலையும் அள்ளிக்குவித்தது.

இப் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜயை வைத்து குஷி படத்தை இயக்கினார். அதுவும் மெகா ஹிட்டானது. இவ்விரு படங்களுக்கு பின் இயக்குனராக அனைத்து ரசிகர்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

இவ்விரு படங்களிலும் அவருடைய கடின உழைப்பு தெரிகின்றது.

வாலி படத்திற்கு இவர் சம்பளங்கள் எதுவும் வாங்கவில்லை. இவர் குஷி படத்திற்கு முன் பணமாக வாங்கிய பணத்தின் மூலம் அவருடைய உதவி இயக்குனர்களுக்கு மோட்டார் வாங்கி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் சீ தமிழில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் சப்பாத்து அணியாமல் செருப்போடு வந்து அதை மேடையின் ஓரத்தில் கழட்டி விட்டு வெறும் காலோடு நடனமாடினார்.

அதை பார்த்த சூர்யா தனது காலில் போட்ட சப்பாத்தை கழட்டி அந்த நடன போட்டியாளருக்கு தானே போட்டு விட்டார்.

இதில் இருந்து அவருடைய மனது எப்படி பட்டது என்று தெரிகின்றது.

இந் நிலையில் எஸ். ஜே சூர்யா மலையாள சினிமாவிற்குள் காலடி வைத்துள்ளார்.

விபின் தாஸ் இயக்கும் படத்தில் இவர் நடிக்கபோவதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

More News