உலக பொதுமறை திருக்குறள் கட்டுரை

ulaga pothumarai thirukkural katturai

உலக பொதுமறையான திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவராவார். இன்று சிறப்புமிக்கதாகவும் பல அறக்கருத்துக்களை எமக்கு எடுத்தியம்பக் கூடியதாகவும் திருக்குறளே காணப்படுகிறது. அந்த வகையில் திருக்குறளானது அறம், பொருள், இன்பம் எனும் 3 பிரிவுகளை உள்ளடக்கி உலக பெதுமறையாக திகழ்கின்றது.

உலக பொதுமறை திருக்குறள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • திருக்குறளின் சிறப்புக்கள்
  • உலக பொதுமறை என்றழைப்பதற்கான காரணம்
  • அறிவை வளர்க்கும் இலக்கியம்
  • திருக்குறளும் நற்கருத்துக்களும்
  • முடிவுரை

முன்னுரை

உலக பொதுமறையான திருக்குறளானது பதினெண் கீழ்கணக்கு நூல்களுல் ஒன்றாகும். அத்தகைய சிறப்புமிக்க திருக்குறளானது இன்று அனைவராலும் கொண்டாடப்பட்டு வருவதற்கான காரணம் இன, மத ரீதியான வேறுபாட்டை தாண்டி பொதுமறையாக திகழ்வதனாலேயாகும்.

திருக்குறளின் சிறப்புக்கள்

திருக்குறளானது தன்னகத்தே பல்வேறுபட்ட சிறப்புக்களை கொண்டமைந்ததொன்றாகவே திகழ்கின்றது. அந்த வகையில் நல்லொழுக்கங்கள் சார்ந்த விடயங்களை எமக்கு எடுத்தியம்பக் கூடியதொரு சிறந்த நூலாகும்.

மேலும் அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் மக்களுடைய வாழ்விற்கு தேவையான அனைத்து ஒழுக்க விடயங்களையும் பேசக்கூடியதொன்றாகவும் திருக்குறளே காணப்படுகிறது.

உலக பொதுமறையான திருக்குறளானது லத்தீன், சீனமொழி, ஆங்கிலம், அரபு என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இன்று அனைவராலும் போற்றப்பட்டு வருகின்றது. மேலும் எந்த சமயத்தையும் சாராது பொதுவான முறையில் அறங்களை எடுத்தியம்புகின்றமையானது அதன் சிறப்பினையே சுட்டி நிற்கின்றது.

உலக பொதுமறை என்றழைப்பதற்கான காரணம்

உலகம் முழவதும் உள்ள அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதொரு வகையில் பொது நீதிகளை கூறுவதாலேயே திருக்குறள் உலக பொதுமறை என அழைக்கப்படுகிறது.

அதாவது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறளானது இன, மத ரீதியான பேதத்தை தகர்த்தெறியக்கூடிய கூற்றாகும்.

அதேபோன்று பொய் பேசாதிருத்தல், திருடாமலிருத்தல் போன்றவை பற்றி திருக்குறளானது குறிப்பிடுவது அனைவருக்கும் பொதுவான நிலையே ஆகும். இதன் காரணமாகவே இன்று உலக பெதுமறையாக திருக்குறள் காணப்படுகிறது.

அறிவை வளர்க்கும் இலக்கியம்

திருக்குறளானது எமது அறிவை வளர்ப்பதில் பாரிய பங்கினை வகிக்கின்றது. அதாவது அற நூலாக மாத்திரமின்றி வாழ்விற்கும் சிறந்தொரு விளக்கத்தினை வித்திடும் இலக்கிய நூலாகவும் காணப்படுகிறது.

அந்த வகையில் மனிதனானவன் தன் பெற்றோர் மற்றும் சுற்றத்தார், அயலவர்கள், அரசன், இறைவன் போன்றோருடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கி எமது அறிவுக்கண்களை திறக்கக்கூடியதாகவே காணப்படுகிறது.

அதேபோன்று வாழ்வின் வழிகாட்டியாகவும் பல நல் அறங்களை போதிக்கும் ஓர் சிறந்த இலக்கியமாகவும் திருக்குறளே திகழ்கின்றது.

திருக்குறளும் நற்கருத்துக்களும்

எமது வாழ்க்கைக்கு அவசியமான பல்வேறு நல்லொழுக்கங்களை போதிப்பனவாகவே திருக்குறள் காணப்படுகிறது.

அதாவது ஒழுக்கம் விழுப்பந் தரலாம், ஒழுக்கம் உயிரிலும் ஓம்பப்படும் என்பதினூடாக ஒழுக்கத்தை கற்றுத்தரக் கூடியதாகவும் தீய ஒழுக்கமானது வாழ்வில் துன்பத்திற்கே வழிவகுக்கும் என்பதனையும் எடுத்தியம்புகின்றது.

மேலும் சமூக நல்லிணக்கம், தர்மம், வாய்மை, அன்பு, உறவு என பல்வேறு நற்கருத்துக்களை எடுத்தியம்பக்கூடியதாகவே திருக்குறளானது காணப்படுகிறது.

முடிவுரை

இன்று சமூகத்திற்கு மத்தியில் சிறப்பு பெற்று விளங்கும் இலக்கியமாக திகழ்வது உலக பொதுமறையான திருக்குறளே அந்த வகையில் திருக்குறளானது எம் வாழ்விற்கான அடித்தளமாகவே காணப்படுகின்றது.

திருக்குறள் போதிக்கும் சிறந்த பண்புகளை எம்மிடம் வளர்த்துக்கொள்ளும் போதே எம்மிடமும் பல நல்விடயங்கள் உருவாகும்.

You May Also Like:

திருக்குறள் குறிப்பு வரைக

தமிழின் முதல் கள ஆய்வு நூல்