ஹரிஸ் தவறவிட்ட வாய்ப்பை எட்டி பிடித்த கவின்!

ஹரிஸ் கல்யாண் பியார் பிரேமா காதல்,இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் போன்ற படங்கள் மூலம் ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்தவர்.

தாராள பிரபு ஓ மணபெண்ணே, கசட தபற,பார்க்கிங்…….. போன்ற படங்களில் நடித்திருப்பார்.

நடிகர் கவின் விஜய் டிவியில் இருந்து சினிமாவிற்கு வந்தவர். சிவகார்த்திகேயன்,சந்தானம், யோகிபாபு இவர்களும் விஜய் டிவியில் இருந்து தான் சினிமாவிற்குள் வந்துள்ளனர்.

இதில் குறுகிய காலத்தில் உச்சத்தை தொட்டவர் சிவகார்த்திகேயன். இதே வரிசையில் கவினும் வந்து கொண்டிருக்கின்றார். கவின் தொடர்ச்சியாக வெற்றி படங்களை தந்து கொண்டிருக்கின்றார். டாடா, லிப்ட் போன்ற படங்கள் மாபெரும் வெற்றியை கொடுத்தன.

இவ்வாறு இருக்க நேற்று கவினின் ஸ்டார் படம் வெளியானது. அனைவரும் படம் ரொம்ப நல்ல இருக்கு என்றும் கவினின் நடிப்பு நல்ல இருக்கு என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

படம் பார்பவர்களுக்கு நல்ல மோட்டிவேர்ஷனாக இருக்கும் என்றும் கூறி வருகின்றனர்.

இவ்வாறு இருக்க ஸ்டார் படத்தில் கவினுக்கு பதிலாக ஹரிஸ் கல்யாண் தான் நடிக்கவிருந்தார். அவர் திடீரென அப் படத்தில் இருந்து விலக கவினுக்கு நடிக்கக்கும் வாய்ப்பு கிடைத்ததாம்.

more news