சிவகார்திக்கேயனின் எஸ் கே 23 படத்தின் டைட்டில் வெளியானது!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவர் தற்போது அமரன் படத்தில் நடித்து வருகின்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் அயலான் படம் வெளியானது.

விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வசூல் பெரிதாக இடம்பெறவில்லை. இதற்கு காரணம் அன்று தனுஷின் கேப்டன் மில்லர் படமும் வெளியானதால் இருபடங்களும் பெரியளவில் வசூல் ஈட்டவில்லை.

சிவகார்த்திகேயன் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர். தற்போது இவர் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக மாறிவிட்டார். விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பின் தொகுப்பாளராக பணியாற்றினார்.

அதன் பின்னரே மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அடி எடுத்து வைத்தார். இவர் ஒரு காமெடி கிரோவாக ஆரம்பத்தில் நடித்து இன்று ஒரு ஆக்ஷன் கிரோவாக மாறி விட்டார். இவருடைய வாழ்வில் திருப்பு முனையாக இருந்த படம் என்றால் அது எதிர்நீச்சல் படம் தான்.

இந்த படம் தனுஷ் இற்கு தான் எழுதப்பட்டது. அப்போது தனுஷ் ஒரு தயாரிப்பாளராகவும் பணிபுரிந்து வந்தார். இந்த கதையை கேட்டதும் உடனே இதை சிவகார்த்திகேயனை வைத்து எடுப்போம் என எடுத்தார். அந்த படத்தின் ஹிட் தான் சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருந்தது.

அமரன் படம் வரும் செப்டெம்பர் மாதம் 27 ம் திகதி வெளியாகவுள்ளது. இந் நிலையில் இவருடைய 23 வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்கே 23 இல் சிவகார்த்திகேயன் மனநிலை சரியில்லாதல் ஒருவராக நடிக்கின்றார் என்றும் இப் படத்திற்கு சிங்க நடை என்று பெயர் வைக்கபட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது. இதை ஏ. ஆர் முருகதாஸ் இயக்குகின்றார்.

more news