கள்ளக்குறிச்சி உயிர்பலிக்கு அரசுதான் காரணம்!- விஜய் கண்டனம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 30 பேர்கள் வரை பலியாகி இருக்கும் சம்பவம் தமிழ் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை ஆரம்பித்துள்ளார். இவர் தற்போது நடைபெற்ற தேர்தலில் போட்டியிடவில்லை.

இருப்பினும் 2026 ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பங்கு கொள்ளவுள்ளார். இவர் கோட் படத்தின் படபிடிப்பிக்கு வெளிநாடு சென்ற போதும் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

கோட் படம் வரும் செப்டெம்பர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள விஜய், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 100க்கும் மேற்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என கூறியுள்ளார்.

இதற்கு அரசின் மெத்தன போக்கு தான் இப்படியொரு சம்பவம் அரங்கேற காரணம் என்றும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இதற்கு பா. ரஞ்சித்தும் கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றினை பதிவு செய்துள்ளார். ரஞ்சித்தும் அரசினை கண்டித்து பதிவு வெளியீட்டுள்ளார்.

more news