ஓடிடிக்கு தயாரான அரண்மனை 4!-எப்போ தெரியுமா?

அரண்மனை 4 சுந்தர் சி இயக்கத்தில் வெளியான படம். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படமாக இருக்கின்றது. இதற்கு காரணம் இது ஒரு குடும்ப படமாக இருப்பதே ஆகும்.

இந்த படம் 100 கோடி வசூல் செய்துள்ளது. அரண்மனை 3 வெளியானதும் படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை, இத்தோடு நிறுத்திவிடுங்கள் என்று சுந்தர் சியை கலாய்த்து வந்தனர். பலர் அரண்மனை படத்தோடு நிறுத்தியிருந்தால் அதற்கான மதிப்பாவது கிடைத்திருக்கும் என்று கூறினர். ஆனால் அரண்மணை 4 வெளியானதும் அதனை கொண்டாடி வருகின்றனர்.

தமன்னா பெற்றோரின் எதிர்ப்பை மீறி சந்தோஷ் பிரதாப்பை காதல் திருமணம் செய்து கொள்கிறார். இருவரும் பெற்றோரை பிரிந்து 10 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

ஒரு நாள் அதிகாலையில் சந்தோஷ் பிரதாப் இறந்து போக அதே நாளில் தமன்னா தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இவர்களின் மரணத்தை பலர் சாதாரணமாக கடந்து செல்கின்றனர். தமன்னாவின் மரண செய்தி தெரிய அண்ணன் சுந்தர் சி ஊருக்கு வருகிறார்.

தமன்னா மரணத்திற்கு பின்பு தமன்னா வாழ்ந்து வந்த அரண்மனையில் அமானுச சக்தி இருப்பதாக பல வதந்திகள் வருகிறார்.

சுந்தர் சி, தமன்னாவின் மரணத்திற்கான காரணம் மற்றும் அந்த அரண்மனையில் இருக்கும் அமானுச சக்தி பற்றிய உண்மையை அறிந்து அதனை எப்படி சமாளிக்கிறார் என்பதே இப்படத்தின் கதை.

தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 3 அல்லது ஜூன் 5ம் தேதிக்குள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.