தமிழ் சினிமாவை மட்டுமல்லாது சினிமா ரசிகர்களையே தனது இசையால் கட்டி போட்டவர் தான் இளையராஜா.
இவர் 7,000 க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியவர். 1,000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைப்பட பின்னணி இசையை வழங்கியவர்.
சமீப காலமாக பாடல் உரிமை தன்னிடம் தான் உள்ளது. அனைவரும் தன்னுடைய பாடல்களை பயன்படுத்துவதற்கு தன்னிடம் அனுமதி பெறவேண்டும் என்று கூறி வருகின்றார். இதற்கு நீதிமன்றத்தில் கூட வழக்கு பதிவு செய்தும் உள்ளார்.
அவருடைய மரியாதையையும் புகழையும் தானே கெடுத்து கொண்டு வருகின்றார்.
இசைதான் பெரிது என்று இவர் கூறி வருகின்றார். இவரின் நடவெடிக்கை எல்லாம் நான் மட்டுமே பெரியவன் என்ற ஆணவத்தில் ஆடுவது போல இருக்கின்றது.
மேலும் பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிவருகின்றார். தன்னுடைய பாடலை பயன்படுத்துவதற்கு தன்னுடைய அனுமதி பெறவேண்டும். பாடலை நீக்கவிட்டால் சட்ட நடவெடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றும் கூறி வருகின்றார்.
இவ்வாறு தான் கூலி பட டீசரில் தனது டிஸ்கோ இசை பயன்படுத்தபட்டதாக கூறி சன்பிக்ஷரஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
தற்போது மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளாராம். மலையாளம் மொழியில் வெளியான நட்பு தொடர்பான படம் ஆகும்.
கமல் நடித்த; ‘மனிதர் உணர்ந்து கொள்ள மனித காதல் அல்ல’ எனும் காதல் பாடலை நட்பின் அடையாள பாடலாக மாற்றியிருப்பார் மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர். இப் படம் மலையாள மொழியிலே தமிழ் தியேட்டர்களில் பல நாட்கள் ஓடியது.
தற்போது மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளர் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு பேட்டியில் இதை பற்றி கூறியுள்ளார்.
‘இரண்டு நிறுவனங்களிடம் முறையாக அனுமதி வாங்கி தான் அந்த பாடலை பயன்படுத்தினோம். தெலுங்கு உரிமை ஒரு நிறுவனத்திடமும், மற்ற மொழி உரிமைகள் இன்னொரு நிறுவனத்திடமும் இருந்தது. பிரமிட் மற்றும் ஸ்ரீதேவி சவுண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் அனுமதி பெற்று இருக்கிறோம்’ என அவர் கூறி இருக்கிறார்.