தீபாவளிக்கு வெளியாகும் ஐந்து படங்கள்!-மோதிக்கொள்ளும் அஜித்-சூர்யா..

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக அஜித், சூர்யா இருக்கின்றார்கள். இவர்கள் இடத்தில் சிவகார்த்திகேயனும் வந்து கொண்டிருக்கின்றார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப் படம் 75 கோடி வசூல் செய்துள்ளது. சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் இருந்து சினிமாவிற்கு வந்தவர்.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான மூணு படத்தின் மூலம் தனுஷின் நண்பனாக அறிமுகமானார். தற்போது அமரன் படத்தில் நடித்து வருகின்றார்.

இவ்வாறு தான் கவினும் சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். இவர் நடித்த டாடா மற்றும் லிப்ட் படங்கள் வரவேற்பை பெற்ற நிலையில் ஸ்டார் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து தனது சம்பளத்தையும் 10 கோடியாக மாற்றியுள்ளார். இதற்கு முன்பு 4 தொடக்கம் 5 கோடி வரை பெற்று கொண்ட இவர் தற்போது 10 கோடி கேட்பது குறித்து அனைவரும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் பிரதீப் ரங்கநாதன். பின்னர் இவர் லவ் டுடே படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இப் படம் ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.

வரும் தீபாவளியை முன்னிட்டு அஜித்தின் விடாமுயற்சி, சூரியாவின் கங்குவா, சிவகார்த்திகேயனின் எஸ்கே 23, பிரதீப்பின் எல்ஐசி மற்றும் கவினின் படங்கள் என ஐந்து படங்கள் வெளியாகவுள்ளது.

அஜித் மற்றும் சூர்யாவின் படங்கள் வெளியாவதால் மற்றைய படங்கள் பின்னுக்கு போகும் என்று கூறப்படுகின்றது.

more news