தனுஷின் ராயன் படத்திற்கு வந்த சோதனை!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். இவரின் நடிப்பிற்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு.

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான மில்லர் திரைபடம் பெரிய வெற்றியை பெறவில்லை, இருப்பினும் இதற்கு முன்னர் நடித்த அசுரன் படம் இவருக்கு பெரிய அடையாளத்தையே பெற்றுக்கொடுத்துள்ளது. அவருடைய நடிப்பாளா அனைவரையும் மீராட்டியிருப்பார்.

தனுஷ் இயக்கி நடித்து வரும் படம் தான் ராயன். இப் படத்திற்கு ஏ. ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். தனுஷ் இயக்கும் 2 வது படமாகும். இது தனுஷின் 50 வது படமும் ஆகும். தனுஷ் உடன் நடிப்பின் அரக்கன் எஸ். ஜே சூர்யாவும் நடிக்கின்றார்.

இப் படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என கூறப்பட்டது. அது தேர்தல் காலம் என்பதால் மீண்டும் வெளியாகும் திகதி மாற்றபட்டுள்ளது.

இப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதும் ரசிகர்கள், ரொம்பவே பயங்கரமாக உள்ளதாகவும், படம் பார்க்க வேண்டும் என்று தோன்றுகின்றதாகவும் கூறுகின்றனர்.

இப் படத்தில் தனுஷ் உடன் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், அபர்ணா முரளி, துஷாரா விஜயன்,வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இப் படத்திற்கு பக்க பலமாக இருப்பது நடிப்பின் அரக்கன் எஸ். ஜே சூர்யா தான். ராயன் படம் வெற்றி பெற்றால் தனுஷின் மார்க்கெட் அதிகமாகிவிடும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.