தமிழ் சின்னிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். அதிக சம்பளம் வாங்கும் நடிகரும் இவர் தான். தற்போது கோட் படத்திற்கு 210 கோடி சம்பளம் வாங்குகின்றார்.
கோட் படம் வரும் செப்டெம்பர் 5 ம் திகதி வெளியாகவுள்ளது. செப்டெம்பர் 5 திகதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப் படம் வெளியாகவுள்ளது.
இப் படத்தின் விசில் போடு பாடல் வெளியானதில் இருந்தே பல சர்ச்சைகள் வெளியாகி வருகின்றன. அப் பாடல் மது பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் இருந்துள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
அரசியலுக்கு வரும் இந்த நேரத்தில் இந்த பாடல்கள் எல்லாம் தேவையா? என்று கேட்டு வருகின்றனர். இப் படத்தில் யுவன் இசை கூட நன்றாக இல்லை என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மற்றும் கோட் படத்தில் இவர் ஒரு சில காட்சிகளில் மட்டும் தான் நடித்தாராம். விசில் போடு பாடலுக்கு மட்டும் தான் நடனம் ஆடினாராம், மற்ற பாடல்கள் டூப் போட்டு ஆர்டிஸ்ட்களை வைத்து எடுத்து இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகின்றது.
இவருடைய கவனம் முழுவதும் அரசியலில் மட்டுமே உண்டு இதை கடமைக்காகவே செய்கின்றார் எனவும் கூறி வருகின்றனர். இந்த படம் ரசிகர்களை எப்படி திருப்தி படுத்த போகின்றது என்று தெரியவில்லை.
இவ்வாறு இருக்க ஜூன் 22 ம் திகதி தளபதி விஜய் தனது 50 வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். நாளை அவருடையை ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்கள் கொண்டாட உள்ளனர்.
இவருடைய பிறந்தநாள் அன்று பகவதி மற்றும் போக்கிரி ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் செய்ய வுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அது 15 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.