அகநானூறு குறிப்பு வரைக

agananuru kurippu in tamil

அகம் என்ற சொல்லுக்கு பெயர் பெற்ற காலமே சங்ககாலம். இக்காலத்தில் எழுந்த அகம் புறம் சார்ந்த நூல்கள் அனைத்தும் எட்டுத்தொகைப் பத்துப்பாட்டு என்ற நூலுக்குள் உள்ளடங்கும். இதில் எட்டுத்தொகை சார்ந்த நூலே அகநானூறு ஆகும்.

கண்டதே காதல் கொண்டதே கோலம் என வாழ்ந்த சங்க காலத்தில் அகம் சார்ந்து குறுந்தொகை, நற்றிணை, கலித்தொகை, ஐங்குறுநூறு போன்ற நூல்கள் தோற்றம் பெற்றாலும் அகம் என்ற சிறப்பு பெயருடைய நூலே அகநானூறாகும்.

அகநானூறு பொருள் விளக்கம்

அகநானூறு என்ற சொல்லை அகம்+நான்கு+நூறு என்று பாகுபடுத்தலாம். அவ்வகையில் அகப்பொருள் பற்றி கூறும் நானூறு பாடல்கள் கொண்டமைவதால் இந்நூல் அகநானூறு என்று அழைக்கப்படுகின்றது.

மேலும் சங்க காலத்திலேயே அகம் என்ற சிறப்பு பெயருடைய நூல் இதுவாகும். மேலும் நீண்ட பாடல் வரிகளை கொண்டமைவதால் இந்நூல் நெடுந்தொகை நானூறு என்றும் அழைக்கப்படுகின்றது.

அகநானூறு நூல் விளக்கம்

அகநானூறு அகத்தினை பாடல்கள் கொண்ட நூல் ஆகும். அந்நூலில் இடம்பெற்ற பாடல்கள் ஆசிரியப்பாவால் அதாவது அகற்பாவாலான நூலாகும். அகநானூற்றின் பாடல்களை பல்வேறு காலத்தில் வாழ்ந்த பல்வேறு புலவர்கள் பாடினர். மொத்தமாக 145 புலவர்கள் பாடியுள்ளனர்.

அவ்வகையில் அகநானூற்றுப் பாடல்களை தொகுத்தவர் உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிர பெருவழுதி ஆவார்.

இந்நூலில் கடவுள் வாழ்த்தானது சிவபெருமானையே சார்ந்தது. இக்கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பரதம் பாடிய பெருந்தேவனார். இந்நூலின் பாடல் வரிகள் 13 தொடக்கம் 31 அடிகளை கொண்டு காணப்படுகின்றது. இந்நூலானது

  • களியாற்றி யானை நிரை( 120 )
  • மணிமிடை பவளம் ( 180 )
  • நித்திலக்கோவை ( 100 )

என 03 பகுதிகளாக பாகுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் குறிஞ்சி, முல்லை, மருதம,; நெய்தல், பாலை என ஐந்திணைக்கும் அகநானூற்றுப் பாடலின் எண்களுக்கு ஏற்ப வைக்கப்பட்டுள்ளது.

அகநானூற்றின் வேறு பெயர்கள்

  • அகம்
  • அகப்பாட்டு
  • நெடுந்தொகை
  • நெடுந்தொகை நானூறு
  • நெடும்பாட்டு
  • பெருந்தொகை நானூறு

அகநானூற்றின் பதிப்பு மற்றும் உரை

அகநானூற்றுக்கு முதலில் உரை எழுதியவர் நா.மு. வெங்கடசாமி நாட்டார் ஆவார். இந்நூலானது 1918 ஆம் ஆண்டு முதலில் பதிப்பிக்கப்பட்டது. இதில் முதல் பக்கம் மட்டுமே காணக்கூடியதாக இருந்தது. ஏனைய பகுதிகளை காண முடியவில்லை. பின்பு 1920 ஆம் ஆண்டு பதிவிடப்பட்டது.

ஆனால் அது தொடர்பான செய்திகளும் காணப்படவில்லை. பின்பு 1923 ஆம் ஆண்டு அகநானூறு மூலமும் உரையும் என்ற பெயரில் ரா. இராகவையங்கார் பதிப்பிக்க கம்பர் விலாசம் ராஜகோபாலையங்கார் என்பவரால் வெளியிடப்பட்டது.

அகநானூற்றின் அரசர்கள்

அகநானூற்றில் அகம் பற்றிய பாடல்கள் காணப்பட்டாலும் 116 பாடல்களில் 87 அரசர்கள் பற்றி பேசப்பட்டுள்ளது. அவ்வாறு அகநானூற்றில் இடம்பெற்ற அரசர்கள்

  • அதியமான்
  • எழினி
  • சோழன் கரிகாலன்
  • பாண்டியன் நெடுஞ்செழியன்
  • உதியன் சேரலாதன்
  • ஆதிமந்தி

அகநானூற்றின் சிறப்புக்கள்

  • சோழர்கால குடவோலை என்ற தேர்தல் முறை பற்றி அகநானூற்றுப் பாடல்கள் கூறுகின்றன.
  • சங்க இலக்கியங்களில் அதிக வரலாற்றுச் செய்திகளை கூறும் நூலே அகநானூறு.
  • பண்டைய காலத்து திருமண முறைகள் பற்றி இந்நூல் கூறுகின்றது.
  • இந்நூலில் இடம்பெறும் உள்ளுறை உரிப்பொருள் போன்றவை சிறப்பு பெற்றவை.
  • வட நாட்டு மன்னனான நந்தன் பற்றியும் மௌரிய அரசர்கள் பற்றியும் தெரிவிக்கும் நூல்.
  • முதுசொல் (பழமொழி) முதன் முதலில் இடம் பெறும் நூல்.
  • பங்குனி விழா நடைபெற்றதைப் பற்றி கூறுகின்றது.

இவ்வாறு எண்ணில் அடங்கா சிறப்புடைய நூலே அகநானூறு ஆகும்.

You May Also Like:

புறநானூறு குறிப்பு வரைக

பா வகையால் பெயர் பெற்ற நூல்