பிரபுதேவா வராததால் குழம்பிய நிகழ்ச்சி!-சோகத்தில் ரசிகர்கள்

நடிகர் பிரபுவாவின் நடனத்தை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. அவரின் நடனத்திற்கு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

பிரபுதேவா நடன இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர்,இயக்குனர் என பல்வேறு பணிகளை சினிமா துறையில் ஆற்றி வருகிறார்.

பிரபுதேவா தற்பொழுது விஜய் நடிக்கும் கோட் படத்தில் நடித்துவருகிறார்.

பி.எஸ் ராக்ஸ் அமைப்பின் சார்பாக சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு நடிகர் பிரபு தேவாவிற்கு அர்ப்பணிக்கும் வகையில் நம்ம மாஸ்டர் நம்ம முன்னாடி என்கிற பெயரில், பிரபு தேவாவின் 100 பாடல்களுக்கு 100 நிமிடங்களில் நடனமாடும் நிகழ்ச்சி சென்னை ராஜரத்னம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

அங்கு ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள், நடன இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்ச்சி காலை 6 மணிக்கு தொடங்கி 7.30 மணிக்குள் முடியும் என அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்து ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.

இந் நிகழ்ச்சிக்காக மாணவர்கள் காலை 5 மணிக்கே வந்துவிட்டார்கள்.ஆனால் பிரபு தேவா நிகழ்ச்சிக்கு 9 மணி ஆகியும் வராததால் அங்கே பதற்றமான சூழ்நிலை உருவானது.

அங்கு வந்த மாணவர்களுக்கு காலை உணவுக்கூட கொடுக்காமல் தண்ணீர் மட்டுமே கொடுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த அடைந்த பெற்றோர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

பிரபுதேவா வீடியோவில் தனது உடல் நிலை சரியில்லாதமையால் இதில் என்னால் கலந்து கொள்ள முடியாமல் போனது. இங்கு நடனமாட வந்திருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று கூறினர். .

பிரபுதேவா வருவார் என்று சொல்லி விட்டு கடைசி நேரத்தில் வராததால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு கூட்டி சென்றுவிட்டனர்.

அங்கு பேசிய ராபர்ட் மாஸ்டர், அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் வரமுடியவில்லை என்றார்.தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக கூறினர்.