என் பார்வைக்கு மிகவும் அழகானவர்!-வரலட்சுமி கொடுத்த பதிலடி

வரலட்சுமி சரத்குமார் சிம்பு நடித்த போடா போடி திரைபடத்தின் மூலம் கதாநாயகியாக திரைஉலகிற்கு அறிமுகமானவர்.

பின்னர் கதாநாயகியாக நடித்த படங்கள் எதுவும் பெரியளவில் வரவேற்பை பெறவில்லை. இதனால் வில்லியாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்.

விஜய் நடிப்பில் உருவான சர்க்கார் படத்தில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தார்.

இவ்வாறு இருக்க சமீபத்தில் வரலட்சுமிக்கும் மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ்க்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இவர்கள் இருவரின் ஜோடி பொருத்தம் நன்றாகவில்லை, இவரின் நடத்தை பற்றியும் தவறாகாவும் அவரின் உருவத்தையும் கேலி செய்தனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக ‘எனக்கு அவரின் கடந்த கால வாழ்க்யை பற்றி எனக் எந்த கவலையும் இல்லை. இணையத்தில் நாங்கள் சரியான பொருத்தம் இல்லை என்று கூறுகிறார்கள்.

இது என்ன சினிமா படமா? ஹீரோ ஹீரோயின் அழகாக இருப்பதற்கு எனக்கு அவரை மிகவும் பிடித்திருக்கின்றது. எனது வாழ்க்கை எனது முடிவு.

அவர் என பார்வைக்கு மிகவும் அழகானவர் என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.

more news