கவினின் மாஸ்க் படப்பிடிப்பு ஆரம்பம்!- மாஸ் காட்டும் கவின்

தமிழ் சினிமாவில் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர்கள் அதிகம். இதில் சந்தானம், சிவகார்த்திகேயன் வரிசையில் கவினும் ஒருவர். இவர்கள் எல்லாம் விஜய்டிவியில் இருந்து சினிமாவிற்குள் வந்தவர்கள்.

சந்தானம், சிவகார்த்திகேயன் இருவரும் காமெடி நிகழ்ச்சியில் இருந்து வந்தவர்கள். கவின் சரவணன் மீனாட்சி என்ற நாடகத்தொடரில் அறிமுகமாகி பின்னர் பிக்போஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

இவரின் முதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற அதனை தொடர்ந்தது நல்ல கதை களம் உள்ள படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இன்றி அமையாத நடிகராகி விட்டார்.

லிப்ட், டாடா, ஸ்டார் போன்ற படங்களில் நடித்துள்ளார். ஸ்டார் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பெரும்பான்மையானோரை படம் கவர்ந்துள்ளது. இந்த படம் 20 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

தற்போது பல படங்களில் கமிட் ஆகி வருகின்றார். இவர் மாஸ்க், வருத்தபட்டதா வாலிபர் சங்கம் 2, சில்லுனு ஒரு காதல் 2, பிளடி பெக்கர் போன்ற படங்களில் ஆவின் கிரோவாக நடிக்கவுள்ளார். மற்றும் நயன்தாராவும் கவினும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர்.

இந்த படத்தில் தன்னை விட வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் ஒருவர் வாழ்க்கையில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை படமாக எடுக்கவுள்ளனர். ஏற்கனவே நயன்தாரா சிம்புவுடன் இணைந்து இப்படி ஒரு படத்தில் நடித்ததுள்ளார்.

இவ்வாறு இருக்க வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாக்கி வரும் மாஸ்க் படத்தின் படபிடிப்பு நேற்று ஆரம்பமாகியுள்ளது. இப் படத்திற்கு ஜி. வி பிரகாஷ் இசையமைக்கின்றார். இதில் ஆன்றியா சார்லி, ருஹானி ஷர்மா, அர்ச்சனா மற்றும் பாலா சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

MORE NEWS