தக்லைஃப் படத்தில் ஏற்பட்ட விபத்தால் கால் எலும்பு முறிந்து விட்டது!-பிரபலம் வைத்தியசாலையில்..

தக்லைஃப் படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வருகின்றது.  உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் கெய்ன்ட் மூவிஸ்’ நிறுவனம், கமல் ஹாசனின் ‘ராஜ் கமல் பிலிம்ஸ்’ நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களும் இணனைந்து தயாரிக்கின்றன.

நாயகன் படத்திற்கு பின் 15 வருடங்கள் கடந்து தற்போது கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இருவரும் இணைந்துள்ளனர். இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது.

ஏ. ஆர் ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து த்ரிஷா, சிம்பு, அபிராமி, அசோக் செல்வன், இந்தி நடிகர் அலிஃபஸல், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். 

கமல்ஹாசன் 3 வேடங்களில் நடிக்கிறார். ஜெயம்ரவி மற்றும் துல்கர் சல்மான் இருவரும் இப் படத்தில் இருந்து விலகிவிட்டனர். இதன் பின் சிம்பு இணைந்து விட்டார். இவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கின்றார்.

இந்த ஆண்டின் இறுதியில் இந்த படம் வெளியாக திட்டமிட்டிருப்பதால் படபிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. மேலும் இப் படத்தில்   மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் உம் நடிக்கின்றார்.

படத்தில் கேலிகேப்டரில் இருந்து குதிப்பது போன்ற காட்சி எடுக்கபட்டது. இதில்  ஜோஜு ஜார்ஜ் இற்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அதில் இவருடைய கால் எலும்பு முறிந்து விட்டது. தற்போது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் இவர் பூரணமாக குணமடைந்த பின் மீண்டும் படத்தில் இணைவார் என்றும் அந்த கேலிகேப்டர் காட்சி அதன் பின்னர் எடுக்கபடும் என்றும் கூறப்படுகின்றது.

more news