மகாராஜாவில் நடிக்கவிருந்த விஜய் ஆண்டனி!- விட்டு கொடுக்காத விஜய் சேதுபதி…

விஜய் ஆண்டனி சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், நடிக்கர் என பல பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.

நான் என்கிற திரைப்படம் மூலம் நடிகராக மாறினார் விஜய் ஆண்டனி. அந்த படம் ஹிட் அடிக்கவே தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். சலிம், பிச்சைக்காரன், சைத்தான், எமன், கோடியில் ஒருவன் என ரசிகர்களை கவர்ந்தார். இதில் பிச்சைக்காரன் திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஹிட் அடித்தது. 

இவ்வாறு இருக்க தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா படம் வெளியானது வெளியாகி முதல நாளே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நாள் மட்டும் 7 கோடி வசூல் செய்துள்ளது.

இதுவரை நான்கு நாட்களில் 40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. மேலும் இப் படத்தின் வசூல் 100 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகின்றது.

தமிழ் சினிமாவிற்கு விஜய் சேதுபதி அடிமட்டத்தில் இருந்து வந்தவர் இவர் வந்த பாதையில் பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார்.

தற்போது தனஞ்சயன் அளித்த பேட்டி ஒன்றில் நிதிலன் சாமிநாதன் தனஞ்செயனுக்கும் கதையை கூறியதாகவும் அவர் உடனடியாக ஓகே சொல்லி விஜய் ஆண்டனி ஹீரோவாக பிக்ஸ் செய்ததாகவும் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறியுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் நிதிலன் சாமிநாதன் கதை கூறியுள்ளார். அவர் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் இந்த கதையை தர சொல்லி கேட்டதற்கு அவர் மறுத்து விட்டார் என்றும் கூறியுள்ளார். மற்றும் நாங்கள் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க உள்ளோம். அவர் மறுத்து விட்டால் விஜய் ஆண்டனியை நடிக்க வைப்போம் என்றும் கூறியுள்ளார்.

more news