நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்தி வருகின்றார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான படம் துணிவு. இதற்கு பின் எந்த படங்களும வெளியாகவில்லை.
ரசிகர்களுக்கு இவரின் இரு படங்கள் குறித்த அப்டேட்களால் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். விடாமுயற்சி படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகின்றது.இந்த படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பைஜானில் தான் அதிகம் நடந்து வருகிறது.
இதில் அஜித் உடன் திரிஷா மற்றும் ரெஜினா ஆகியோர் நடிக்கவுள்ளனர். படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளதால் படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
மற்றும் அஜித் பைக் ரைடில் ஆர்வம் உள்ளவர். துணிவு படத்திற்கு பின் இவர் தனது நண்பர்களை அழைத்து கொண்டு நாடு நாடாக சுற்றியதால் இவரின் படங்கள் குறித்த அப்டேட் வெளியாவதற்கு தாமதம் ஆனது.
இந் நிலையில் குட் பேட் அக்லி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் சில வாரங்களுக்கு முன்னர் நிறைவு பெற்றது.
தற்போது அஜித்குமார் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு வரும் போது அவரை பார்த்த ரசிகர் ஒருவர் அஜித்குமாருக்கு பெருமாள் சிலை ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இவர் ஹோட்டலில் இருந்து வரும் போதும் அங்கிருந்தவர்களுடன் கை குலுக்கி பேசிய புகை படங்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.