பிரபல இயக்குனர் மரணம்!-சோகத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் சூரிய பிரகாஷ் இன்று காலை உயிரிழந்துள்ளார். இவர் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். இதனை கேட்ட திரை உலகே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

மாயி, திவான் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் சூரிய பிரகாஷ்.


இவர் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். மாயி படத்தில் வரும் ”வாம்மா மின்னலு” என்ற காமெடி காட்சி இன்றுவரை அனைவரையும் சிரிக்கவைத்து கொண்டு தான் இருக்கின்றது.

மாயி படத்தில் சரத்குமார் நாயகனாக நடித்திருப்பார். இவருடன் வடிவேலும் நடித்திருப்பார். சரத்குமார் மற்றும் வடிவேலை வைத்து படத்தை நன்றாகவே எடுத்திருப்பார்.

இப் படத்தை தொடர்ந்து சரத்குமார் திவான் படத்திலும் நடித்துள்ளார். இப் படமும் ஓரளவு வெற்றியை பெற்றது.

1996 ஆம் ஆண்டு மாணிக்கம் படத்தை இயக்கினார். இதனை தொடர்ந்து தான் மாயி படத்தை இயக்கினார். இப் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பர்.
மாயி படத்தின் வெற்றிக்கு வடிவேலின் காமெடி ஒரு முக்கிய காரணம்.

சரத்குமார் தனது எக்ஸ் தளத்தில் சூரிய பிரகாசிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர், எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்ய பிரகாஷ் இன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.


அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. நேற்றைய தினம்கூட அவருடன் பேசிக்கொண்டிருந்ததேன்.

அவரை பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டிருக்கிறார்.

more news