விஜய் டிவிக்கு எதிராக சன் டிவியில் காலடி வைக்கும் வடிவேல்!

விஜய் டிவியில் 4 வருடங்களாக நடைபெற்றுவரும் ஷோ தான் குக் வித் கோமாளி. தற்போது 5 வது சீஷனும் ஆரம்பமாகி விட்டது. ஒரு சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு நகைச்சுவை நிகழ்ச்சியாக மாற்றியதால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

5 வது சீஷனும் ஆரம்பமாக தாமாதமானதால் குக் வித் கோமாளி 4 சீசன் ஓடு முடிவடைந்து விட்டது என்று ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர்.

இந்த 5 வது சீஷன் ரசிகர்கள் மனதை பெரிதாக கவரவில்லை. தயாரிப்பு குழு மாறியதா? இல்லை முதல் வாரம் என்பதாலா? என்பது சரியாக தெரியவில்லை. இருப்பினும் இரண்டு, மூன்று வாரங்களில் சோவின் நிலமை தெரிந்து விடும் .

இதில் பங்கேற்ற போட்டியாளர் யூட்டியூப்பர் இப்ரான் பற்றிரும் பல நெருடல்கள்; இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்தால் நாம் குக் வித் கோமாளி பார்க்க மாட்டோம் என்று அவருடைய மதத்தை சாடி பதிவுகளை பதிவிட்டும் வருகின்றனர்.

இந் நிலையில் குக் வித் கோமாளி ஷோவில் இருந்து சன் டிவி டாப்பு குக்கூ டூப்பு குக்கூ என்ற சோவிற்கு பலர் சென்றுள்ளனர். அதில் வெளியேறிய செஃப் வெங்கடேஷ் பட் தான் நடுவராக இருக்க போகிறார்.

மற்றும்  ஜி.பி. முத்து, மோனிஷா, பரத், தீபா போன்றோரும் சென்றுள்ளனர். இது மட்டுமாலாது தயாரிப்பு குழுவும் அங்கு சென்றுவிட்டது.

இவ்வாறு இருக்க வைகைபுயல் வடிவேலும் சன் டிவி டாப்பு குக்கூ டூப்பு குக்கூ ஷோவிற்கு வர இருப்பதாக கூறப்படுகின்றது. வடிவேலின் காமெடிக்கு இங்கு யாருமே இல்லை. அவருடைய இடத்தை யாராலும் பிடிக்க கூட முடியாது.

இவ்வாரு இருக்க ஒரு சில காலம் இவர் சினிமாவில் காணாமல் போய் விட்டார். தற்போது மீண்டும் கலக்கி வருகிறார்.

இவர் நடித்த மாமன்னன் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அவருடைய நடிப்பை நன்றாக வெளிப்படுத்தியிருந்தார்.

இவர் சன் டிவியிடம் இந்தா நிகழ்ச்சிளில் கலந்து கொள்வதற்கு ஒரு பெரிய தொகையை கேட்டுள்ளார். அதற்கு சன் டிவி ஒப்பு கொண்டால் நிச்சயம் வடிவேலு பங்கேற்பார்.

வடிவேல் மட்டும் அதில் பங்கேற்றால் சன் டிவி, டி ஆர் பி யில் முன்னிலையில் வகித்து விடும்.

More News