பகத் பாசிலுக்கு வந்த அபூர்வ நோய்!- பட வாய்ப்பை இழக்கும் பகத் பாசில்

பகத் பாசில் பிரபல மலையாள நடிகர். இவர் தற்போது தமிழ், தெலுங்கு என எல்லா மொழிகளிலும் நடித்து வருகின்றார்.

தமிழில் விக்ரம், மாமன்னன் போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டார். தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தனது நடிப்பை சிறப்பாக வெளிக்காட்டி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மலையாள திரைப்படமான ஆவேசம் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப் படம் 150 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. இப் படத்திற்கு பின் இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகமாகி விட்டது.

தற்போது புஷ்பா 2, வேட்டையன், மாரிசன் உட்பட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறு இருக்க இவர் ஒரு அபூர்வ நோய் ஒன்றினால் பாதிக்கபட்டுள்ளார். இதை இவரே ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். இவர் ஏடிஎஷ் என்ற நோயினால் பாதிக்கபட்டுள்ளார்.

இந்த நோய் மூளையில் உள்ள நரம்பில் ஏற்படும் ஒரு மாற்றம் ஆகும். இந்த நோயால் பாதிப்பு அடைந்தவர்கள் ஒரே விஷயத்தில் அதிக நேரம் கவனம் செலுத்த முடியாது என்றும், எளிதில் திசை திரும்ப கூடிய தன்மை உடையவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது..

இந்த நோயின் அறிகுறிகளாக மறதி, படபடப்பு, கவனசிதறல் போன்ற அறிகுறிகள் காணப்படும். சிறுவயதில் இந் நோய் அறிகுறிகள் தென்பட்டால் அதை மாற்றிவிடலாம். ஆனால் பகத் பாசிலுக்கு 41 வயது ஆகிவிட்டது. இதனால் இவருக்கு இந்த நோயை மாற்றமுடியுமா? என்று வைத்தியர்களிடம் ஆலோசனைகள் கேட்டு வருகின்றார்.

இதனால் இவருக்கு படவாய்ப்புகள் குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது.

more news