வெங்கடேஷ் பட் பற்றி ஒருதர் கூட பேசலயே!- கொந்தளித்த ரசிகர்

குக் வித் கோமாளி கடந்த 4 வருடங்களாக நடைபெற்று வருகின்றது இவ்வாறு இருக்க கடந்த சனிக்கிழமை கூக் வித் கோமாளி சீசன் 5 அரம்பமாகியுள்ளது. இதில் பிரியங்கா உட்பட 10 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த 4 வருடங்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் ரக்சன். ஆனால் இந்த சீசனில் ரக்சன் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்குகின்றனர். மணிமேகலை கடந்த 3 வருடங்களாக கோமாளியாக இருந்து தற்போது தொகுப்பாளராக வந்துள்ளார்.

கடந்த 4 வருடங்களாக செப் ஆக தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் கலந்து வந்தனர்.

வெங்கடேஷ் பட் விஜய் டிவியில் இருந்து விலகி சன் டிவிக்கு சென்றுள்ளார். தற்போது ரங்கராஜ் மற்றும் தாமு இருவரும் செப் ஆக கலந்து கொண்டுள்ளனர். தயாரிப்பு குழுவும் மாறிவிட்டது.

இவ்வாறு இருக்க 27 ம் திகதி ஆரம்பித்த ஷோவில் வெங்கட் பாட் பற்றி யாருமே பேசிக்கொள்ளவில்லை.

இதை பார்த்த ரசிகர்கள் யாருமே அவரை பற்றி பேசவில்லையா? என்று கவலையுடன் பதிவிகளை வெளியீட்டு வருகின்றனர்.

இது குறித்து இவரின் ரசிகர் ஒருவர் சமூகவலைதளத்தில் பதிவிட்ட பதிவு தற்பொழுது வைரல் ஆகி வருகின்றது.

உங்கள பத்தி மிஸ் பண்றோம்னு கூட ஒருத்தர் கூட நேத்து ஷோல பேசல அப்படி என்ன சேர் மனுஷங்க.

ஆயிரம் கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனா நீங்க பில்ட் பண்ண ஷோல உங்கள மிஸ் பண்றோம்னு ஒருத்தர் கூட பேசல அதான் எனக்கு இதான் உலகம்னு தோணுது.

மேபி உங்கள பத்தி பேச கூடாதுனு டீவி சேனல் சொல்லி இருக்கலாம். பான்ஸ் நாங்க தான் ரொம்ப பீல் பண்றோம். என்று பதிவீட்டிருந்தார்.

இதற்கு வெங்கடேஷ் பட் ‘உண்மை ஒருநாள் வெல்லும்’ என்று பதிலளித்துள்ளார்.