பேரன்பு மற்றும் தங்க மீன்கள் படத்தை இயக்கிய இயக்குனர் தான் ராம். இவர் பெரியளவில் படங்கள் எதுவும் இயக்கவில்லை. தற்போது ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தை இயக்கியுள்ளார்.
படத்தில் ஹீரோவாக நிவின் பாலி நடித்துள்ளார். நாயகியாக அஞ்சலி நடித்துள்ளார். சூரியும் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நிவின் பாலி பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த மலையாள நடிகர் ஆவார். இவரின் படங்கள் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது இதிலும் நடித்து வருகின்றார்.
காமெடியனாக இருந்து கிரோவாக அவதாரம் எடுத்த சூரியும் இதில் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். இவரின் நடிப்பு சினிமாவையே புரட்டி போட்டு விட்டது. தமிழ் சினிமாவில் இவர் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து விட்டார்.
பரோட்டா சூரி என்ற பெயரை கருடன் சூரி என்று மாற்றுவதற்கு அடிதகடலாம் போட்டவர் வெற்றி மாறன் தான். விடுதலை படத்தின் மூலம் கிரோவாக என்றி கொடுத்தார் சூரி. அதிலேயே தெரிந்து விட்டது சூரி காமெடியனாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடையாது என்று.
சூரி ஒரு சாதாரண மனிதராக இருந்து இன்று பல தடைகளை தாண்டி இன்று இப்படி ஒரு நிலைக்கு வந்துள்ளார் என்றால் அது அவருடைய கடின உழைப்பு தான் காரணம்.
இவ்வாறு இருக்க படம் ரொமேனியாவின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. இவ்வாறு தான் நெதர்லாந்தில் நடைபெற்ற ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த ஜனவரி மாதம் திரையிடப்பட்டு. பிக் ஸ்கிரீன் போட்டிப் பிரிவில் தேர்வாகி இருந்தது. இந் நிலையில் நிவின் பாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதை பகிர்ந்துள்ளார்.