படிக்காத பக்கங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து பேசிய விடையம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவ் விழாவில் இசை பெரிதா? மொழி பெரிதா? என்ற கேள்விக்கு சரியான பதிலடி ஒன்றை கொடுத்திருப்பார்.
இசைஞானி இளையராஜா காப்புரிமை வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இசைதான் பெரிது, இவ் இசையை உருவாக்கியவருக்குதன் பாடல் சொந்தம் என்றும் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந் நிலையில் இதற்கு சரியான பதிலடியை வைரமுத்து கூறியுள்ளார். ஒரு பாடலுக்கு வரிகளும் இசையும் இன்றியமையாத ஒன்று என்றும் இரண்டும் கலந்தால் தான் அது பாடல் எனக் கூறியுள்ளார். இது தெரியாதவன் ஞானியே கிடையாது. என்று இளையராஜாவை சடையாக சுட்டி காட்டியிருப்பார்.
இது இளையராஜாவிற்கு பெரும் பதிலடியாக தான் இருக்கும்.
மனிதர்களுக்கு பெயர் வைத்தால் தான் அவர்கள் இன்னார் என அறியப்படுவார்கள். பெயர் இல்லாமல் இருந்தால் எப்படி அழைப்பார்கள்.
சின்ன சின்ன ஆசை பாட்டு பாடுங்கள் என்று தான் சொல்வார்கள். அதன் ராகத்தை யாரும் சொல்லி பாட சொல்ல மாட்டார்கள் என வசதியாக ஏ ஆர் ரகுமான் பாடலையும் இதற்குள் புகுத்தி விட்டார் .
இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களா இருந்து பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். பிரபல பாடகி சுசீலா அவர்களை கௌரவிக்கும் விதமாக சுசீலா 65 எனும் விழாவை ஜீ தமிழ் 2019 இல் நடத்தியது.
இவ் விழாவில் இருவரும் கலந்து கொண்டனர். அவ் விழாவில் இளையராஜா கவிஞன் கண்ணதாசனை போல ஒரு கவிஞன் இந்த உலகத்தில் கிடையாது என்று கூறியிருப்பார். இதற்கு வைரமுத்து சரியான ஒன்றை பதிலடி கொடுத்திருப்பார்.
சிறந்த கவிஞன் கவியரசர் கண்ணதாசன் என்பதில் எங்களுக்கும் வேறுபாடு இல்லை. ஆனால் உலகத்தில் சிறந்த இசையமைப்பாளர் எம். எஸ் விஸ்வநாதன் என்பதை தவிர யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை என்று கூறியிருப்பார்.
ஒரு பாட்டுக்கு பெயர் வைத்தது மொழி தான், அதை அழகு படுத்தியது இசை , அதற்கு அபிநயம் செய்தது இசை , அதற்கு சுகம் கொடுத்தது இசை இதை ஒரு பொழுதும் மறுக்க முடியாது. ஆனால் அந்த பாட்டிற்கு பெயர் சூட்டியது மொழி தான் என்று கூறியிருந்தார்.
ஒரு பாட்டிற்கு மொழி இசை இரண்டும் முக்கியமே என்று கூறி முடித்திருந்தார்.