செஞ்சம் வீணை என்றால் என்ன

senjam veena in tamil

வீணைகளிலே பலவகை உண்டு. சரஸ்வதி வீணை, ருத்ரவீணை, ஏகாந்த வீணை, சாகர வீணை, விசித்திர வீணை என பல வகை உண்டு. இவற்றில் செஞ்சம் வீணை என்பது ஒருவகை வீணையாகும். இந்த வீணையில் நாம் எவ்வாறு வாசித்தாலும் சோகமான ஒளியை தான் எழுப்பும்.

கர்நாடக சங்கீதத்தில் அதிகளவான ராகங்கள் உண்டு. அதில் தோடி எனும் ராகமும் உண்டு. இந்த ராகத்தை சோகமான ராகம் என வகைப்படுத்தியுள்ளனர். இந்த ராகத்தை அதாவது தோடி ராகத்தை செஞ்சம் வீணையில் வாசித்தால் சந்தோசமான ஒலி எழுப்பும். அதனால் தான் “செஞ்சம் எனும் வீணை பாடுதுமே தோடி” என சினிமா பாடல் வரி எழுதப்பட்டுள்ளது.

வீணையின் சிறப்பு

இசைமீட்கலாம், கீர்த்தனைகள் வாசிக்கலாம், வீணை ஒலியானது கேட்பதற்கு இனிமையானது. இசைக்கருவிகளிலேயே மிகவும் உயர்வான புனிதமான இசைக்கருவி வீணையாகும்.

இது தவிர மிகவும் சிறப்பான விடயம் யாதெனில், ஒரு அறையில் 10 வீணைகள் இருக்கின்றன எனில், இவை யாவும் மீட்பதற்கு தகுந்ததாக உள்ளன எனக் கொள்வோம். அதில் ஒரு வீணையை மட்டும் மீட்டால் சத்தம் 10 வீணைகளிலுமே வரும்.

இறைவனும் வீணையும்

இறைவழிபாட்டில் இசையும் இசைக்கருவிகளும், குறிப்பாக வீணை உட்பட பல இசைக்கருவிகளும் பயன்படுத்தப்பட்டமையை இலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன. காப்பிய இலக்கியம், கல்வெட்டுக்கள், ஓவியங்கள், சிற்பங்கள், உரையாசிரியரின் குறிப்புகள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுத்தப்பட்டுள்ளன.

கோவில் வழிபாடு முறைகளில் இசைக்கருவிகள் பேரிடம் பெற்றுள்ளன. தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு ஆடற்கலையில் சிறந்த 400 பெண்கள் உட்பட அவர்களை ஆட்டுவிக்கும் நட்டுவர், பாடப்படுபவர்களான கானப்பாடிகள்.

கந்தர்வர், தமிழ் பாடுவோர் வீணை, முகவினை, கொட்டி, மத்தளம், முத்திரைச் சங்கு, பக்க இசைக் கருவிகள், மேளம் போன்ற கருவிகளை வாசிப்பவர்களையும் இராசராசன் நியமித்திருக்கின்றார் என்ற செய்தியினை கல்வெட்டுக்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிகின்றது.

இறைவனும், அவர்களது வீணையின் பெயர்கள்

வீணையானது 17 ஆம் நூற்றாண்டில் விஜயரகுநாதவர் ஆட்சிக் காலத்தில் வடிவமைக்கப்பட்டது. கடவுளர் இசைக்கருவிகளோடு இணைத்து நினைக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் சிவபெருமானது கையில் தமருகம், பார்வதி கையில் வீணையுடன் காணப்படும் பொழுது மாதங்கி எனும் திருமகள் வீணையுடன் காணப்படும் பொழுது “வீணாலக்மி” என்றும் அழைக்கப்படுகின்றார்கள்.

கையில் வீணையுடன் காணப்படும் தென்முகக் கடவுள்களுள் வீணாதட்சிணாமூர்த்தி என பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றார்கள். மேலும் தும்புரு, நாரதர் இருவரும் வீணை வாசிப்பவர்களாக காணப்படுகின்றனர்.

32 வகையான வீணைகளை 31 தெய்வங்கள் இசைப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

 • பிரம்மதேவன் – அண்டம்
 • விஷ்ணு – பிண்டகம்
 • ருத்திரர் – சராசுரம்
 • கௌரி – ருத்ரிகை
 • காளி – காந்தாரி
 • லட்சுமி – சாரங்கி
 • சரஸ்வதி – கச்சம் என்னும் காந்தாரி
 • இந்திரன் – சிதத்திரம்
 • குபேரன்- அதிசித்தம்
 • வருணன் – கின்னரி
 • வாயு – திக்குச்சிகை யாழ்
 • அக்கினி – கோழவெளி
 • நமன் – அஸ்தகூர்மம்
 • அஹா ஊஹரி தேவர்கள் – நிர்மதி
 • சித்ராசேனன் – தர்மலதி
 • அனுமன் – அனுமதம்
 • நிருதி – வராளியாழ்
 • ஆதிசேடன் – விபஞ்சகம்
 • வியாழன் – வல்லகியாழ்

You May Also Like:

இந்திய பெருங்கடலின் ஆழமான பகுதி

புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன