பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் எனும் வாசல் இருக்கும். வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் எனும் திருக்கதவு திறக்கப்படும். அந்த வாசல் வழியாகத்தான் பெருமாள் கடந்து வந்து அருள் பாலிப்பார்.
அதிலும் ஸ்ரீரங்கத்தில் இருக்கக்கூடிய சொர்க்கவாசல் என்பது அந்தக் கோவிலின் வடக்கு பகுதியில் உள்ளது. அந்த வாசல் வழி மார்கழி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசி அன்று மட்டுமே திறக்கப்படும்.
அப்போது அந்த வாசல் வழியாக கடந்து பெருமாள் அருள் புரிவதாக காலம் காலமாக வைகுண்ட ஏதால் ஏகாதசி கொண்டாடப்பட்டு வருகின்றது.
சொர்க்கவாசல் திறப்பு வரலாறு
முற்காலத்தில் பிரம்மாவிற்கு ஏற்பட்ட அகங்காரத்தை அடக்க நினைத்த மகாவிஷ்ணு தன் காதுகளிலிருந்து மது கைடபர்கள் எனும் இரு அசுரர்களை வெளிப்படச் செய்தார். அவர்கள் பிரம்மாவைக் கொல்ல முற்பட்டபோது அதனைத் தடுத்த மகாவிஷ்ணு நீங்கள் கேட்கும் வரங்களைத் தருவதாகக் கூறினார்.
ஆனால் அசுரர்கள் மகாவிஷ்ணுவிற்குத் தாங்கள் வேண்டுமானால் வரம் தருவதாகக் கூறினர். உடனே மகாவிஷ்ணுவும் அந்த அசுரர்கள் தனது கைகளால் வதம் செய்யப்பட வேண்டுமெனக் கேட்டார்.
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அசுரர்கள் மாகாவிஷ்ணுவிடம் ஒரு விண்ணப்பத்தைக் வைத்தனர். அதாவது ஒரு மாதம் முழுக்க விஷ்ணு பகவான் அவர்களிடம் போரிட வேண்டும். அதன் பிறகே அசுரர்கள் சித்தியடைய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டனர்.
யுத்தத்தின் முடிவில் பகவான் அந்த அசுரர்களை வீழ்த்தினார். பகவானின் மகிமைகளை உணர்ந்த அசுரர்கள் பகவானின் பரமபதத்தில் தாங்கள் நித்தியவாசம் செய்ய வேண்டுமென்ற வரத்தினைக் கேட்டனர்.
அதன் படியே மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தின் வடக்கு வாசலைத் திறந்து அதன் வழியாக அசுவுரர்களைப் பரமபதத்தில் சேர்த்துக் கொண்டார்.
அசுரர்கள் தாங்கள் பெற்ற பேரின்பம் அனைவரும் பெற வேண்டுமென்று விரும்பி ஒரு பெரும் வரம் வேண்டினர்.
அதன்படி பகவான் அசுரர்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை ஒரு உட்சவமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இந்நாளில் விரதமிருந்து அதிகாலை திறக்ககப்படும் சொதர்க்க வாசல் வழியே இறைவனைத் தரிசித்தால் சகல புண்ணியங்களும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டுமெனவும் வேண்டினர்.
பகவானும் அவர்கள் கேட்டபடியே வரம் அருளினார். எனவேதான் மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி நாளில் சொர்க்கவாசல் திறக்கப்படுகின்றது.
சொர்க்கவாசல் மகிமைகள்
வைகுண்ட ஏகாதசி ஆண்டுதோறும் வளர்பிறை 11ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது. சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு மார்கழியில் இடம்பெறும்.
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கின்றேன் எனப் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியுள்ளார். மார்கழி வளர்பிறை நாளில் வரும் ஏகாதசியை நாம் வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடுகின்றோம்.
பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் முதல் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் தொடங்கி அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெறும்.
பெருமாளின் திருவடியைத் தரிசிக்க லட்சக்கனக்கான பக்தர்கள் காத்திருப்பார்கள். சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளும் இறைவன் பக்தர்களையும் அந்த வாசல் வழியாக அழைத்துச் சென்று அருள்பாலிப்பார்.
மாதத்தில் இரண்டு என வருடத்தில் 24 ஏகாதசிகள் வருவதுண்டு. ஆனால் வைகுண்ட ஏகாதசியன்றுமட்டும் பெருமாள் வைகுண்டத்திலிருந்து அருள்பாலிப்பதால் நல் விரதமிருந்த இரவுமுழுதும் கண்விழித்து அதிகாவைலயில் இறைவனைத் தரிசித்தால் உலகின் நன்மைகள் யாவும் பெறலாம்.
You May Also Like: