விண்வெளி பயணம் கட்டுரை

vinveli payanam katturai in tamil

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் வாழக்கூடிய மனிதர்களது வளர்ச்சியானது பல்வேறு புதிய சாதனைகளை இந்த உலகிக்கு வழங்கி உள்ளது.

இவ்வாறு அமைந்த சாதனைகளில் ஒன்றாக இன்று விண்வெளி தொடர்பான ஆய்வுகளும், பயணங்களும் உலகினிடையே அதிகமாகியுள்ளன. மனிதனுடைய வளர்ச்சியின் உச்சகட்டமாக இன்றைய காலங்களில் மேற்கொள்ளக்கூடிய விண்வெளி பயணங்கள் அமைந்துள்ளன.

விண்வெளி பயணம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • விண்வெளி என்றால் என்ன
  • விண்வெளி ஆய்வு
  • இந்திய விண்வெளி பயணங்கள்
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள்
  • முடிவுரை

முன்னுரை

மனிதனுடைய திறமைக்கும் அவனுடைய வளர்ச்சிக்கும் எல்லையில்லை என்பதை தற்கால விண்வெளி பயணங்கள் அதிகமாக எமக்கு உணர்த்தி நிற்கின்றன.

உலகில் காணப்படுகின்ற ஒவ்வொரு நாடுகளும் தங்களுடைய உச்சகட்ட வளர்ச்சியினை பிரபஞ்சத்தில் காணப்படக்கூடிய ஏனைய நாடுகளுக்கு உணர்த்துவதற்காக விண்வெளி பயணங்களை ஆயுதமாக பயன்படுத்துகின்றன.

அதாவது எல்லை இல்லாத விண்வெளிக்கு பயணங்கள் செய்து, புதிய புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்கு கொண்டு வருவதற்கே ஒவ்வொரு நாடும் முனைகின்றன.

விண்வெளி என்றால் என்ன

விண் வெளி என்பது பிரபஞ்சத்தின் பொருட்கள் எல்லாம் நகர்ந்து செல்லக்கூடிய கிட்ட தட்ட ஒரு வெற்றிடமாகும். இங்கு நகர்ந்து செல்லும் பொருட்களில் நமது பூமியும் அடங்கும்.

இந்த பரந்த விண் வெளியில் நடசத்திரங்களும், கிரகங்களும், பூமியும் மிகமிக சிறிய புள்ளிகளாகவே காணப்படுகின்றன. அதாவது இந்த விண்வெளி என்பது பரந்த மற்றும் விசாலமான ஒரு வெளியாகவே கருதப்படுகின்றது.

விண்வெளி ஆய்வு

விண்வெளி பயணம் என்பது வானவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, புற விண்வெளி பற்றிய தகவல்களை அறிவதற்காக மேற்கொள்ளக்கூடிய ஓர் பயணமாகும்.

இந்த வகையில் விண்வெளி ஆய்வுகளுக்காக பயன்படுத்தக் கூடிய விண்கலன்கள் மனித விண்கலங்கள் அல்லது இயந்திர விண்கலங்கள் ஆகிய இரண்டில் ஒன்றாக காணப்படுகின்றன.

விண்வெளிக்கான ஆய்வுகளுக்கு ரொக்கெட் பயணங்களை மேற்கொள்ளுதல் என்பது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே தொடங்கியுள்ளது.

இந்திய விண்வெளி பயணங்கள்

1975 ஆம் ஆண்டு இந்தியாவினுடைய செயற்கைக்கோளானது ரஷ்யாவினால் அனுப்பப்பட்ட போதும் 1980களில் இந்தியாவின் இஸ்ரோ தன்னுடைய முதல் உருவாக்கமான ரோகினி செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியது.

இதனைத் தொடர்ந்து தங்களுடைய சொந்த செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பக்கூடிய திறன் கொண்ட நாடுகளில் இந்தியாவும் இடம் பிடித்துக் கொண்டது.

இதன் அடிப்படையில் கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், ராகேஷ் சர்மா போன்ற உலகறியும் விண்வெளி வீரர்கள் இந்தியாவின் விண்வெளி சார் ஆய்வுகளுக்கு பங்காற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள்

இந்தியா நாடானது விண்வெளித் துறையில் பல்வேறு சாதனைகளை படைக்கும் நோக்கில் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களை உருவாக்கி செயற்படுத்திக் கொண்டிருப்பதனை காணலாம்.

இந்த வகையில் பல்வேறு விண்வெளி நிலையங்கள் காணப்பட்டாலும் அவற்றில் சிறப்பான விண்வெளி ஆய்வு மையங்களாக இஸ்ரோ செயற்கைக்கோள் மையம் மற்றும் மின் ஒளியிலான அமைப்புகளுக்கான ஆய்வகம் என்பன பெங்களூரிலும், சதீஷ் தமான் விண்வெளி மையம் ஸ்ரீஹரி கோட்டாவிலும், விக்ரம் சாரா பாய் விண்வெளி மையம் திருவனந்தபுரத்திலும், தும்பா ராக்கெட் தளம் கேரளாவிலும் அமைந்திருப்பதை காணலாம்.

முடிவுரை

விண்வெளி பயணங்கள் என்பது மிகவும் சாதாரணமான ஒரு விடயம் அல்ல பல்வேறு மனித உயிர்களை பணியமாக வைத்தே இந்த பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த வகையில் விண்வெளி ஆய்வகுக்குச் சென்ற பல விண்வெளி வீரர்கள் உயிர் இழந்து உள்ளமையும் நாம் அறிந்த உண்மையாகும்.

ஆனாலும் இந்த உலகுக்கு புதிய கண்டுபிடிப்புகளையும், விண்வெளி சார் புதிய தகவல்களையும் வழங்குவதற்காக இந்த விண்வெளி பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றமையைக் காண முடியும்.

You May Also Like:

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் கட்டுரை

விண்வெளியில் இந்திய சாதனைகள் கட்டுரை