வாக்களிக்க வந்த அஜித்துடன் வம்பிழுத்த சீனியர் சிட்டிசன்!

இந்தியாவில் இன்று தேர்தல் இடம் பெற்று வருகின்றது. தம்முடைய வாக்கினையும் பதிவு செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு பிரபலங்களும் சென்று தங்கள் வாக்கை அளித்தனர்.

இவ்வாறு நடிகர் அஜித்தும் தன்னுடய வாக்கை அளிப்பதற்காக முதல் ஆளாக சென்றிருந்தார். அஜித் 6.45 மணிக்கு எல்லாம் திருவான்மியூரில் உள்ள வாக்கு சாவடிக்கு போய் விட்டாராம்.

எனினும் அவர் வருவதற்கு அவருடைய ரசிகர்களும் பத்திகையாளர்களும் சென்றுவிட்டனர். அஜித் வரும் போது அவருடைய ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டனர்.

சமீபத்தில் விடாமுயற்சி படபிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்தார்.

இருப்பினும் தன்னுடைய வாக்கை செலுத்துவது தன்னுடைய உரிமை மட்டுமல்ல கடமையும் என்று தன் வாக்கை அழிப்பதற்கு முதல் ஆளாக வந்து நின்றார்.

நடிகர் அஜித் அண்மையில் நடைபெற்ற ஷங்கரின் மக்களின் திருமணத்திற்கு கூட செல்லவில்லை என்பது குறிப்பிட தக்கது.

இவர் வாக்களிக்க சென்றபோது அங்கிருந்த முதியவர் வாக்குவாதம் நிகழ்த்தியுள்ளார்.

அஜித் வாக்குச்சாவடிக்கு சென்றபோது போலீசார் அவரை உள்ளே செல்ல அனுமதித்தனர்.

அப்போது அங்கிருந்த 82 வயது கடந்த முதியவர் ஒருவர் எவ்வாறு அவரை உள்ளே செல்ல அனுமதிக்காலம், வயது வந்த நாங்கள் இங்கே நிக்கின்றோம். முதலில் அவரை வெளியே வார சொல்லுங்கள் என்று போலீசாருடன் வாக்கு வாதம் நிகழ்த்தியுள்ளார்.

More News