2018 ம் ஆண்டு வெளியான கனா படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். இப் படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்
இப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்,சத்யராஜ்,சிவகார்த்திகேயன்,ரமா,தர்ஷன் ஆகியோர் முக்கிய காதபாத்திரத்தில் நடித்துள்ளனர். இருப்பினும் இப் படத்தில் முன்னணி காதபாத்திரத்தில் ஐஸ்வர்யா நடித்துள்ளார்.
கனா படம் முழுக்க முழுக்க விவசாயம் மற்றும் கிரிக்கெட் ஐ மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் ஆகும்.
இப் படத்தின் கதை , ஒரு ஏழை விவசாயி, அவருக்கு கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும் ஒருநாள் இந்தியா கிரிகெட் அணிதேற்று விட்டது. அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டர். அதை பார்த்த அவருடைய மகள் அப்பாவை மகிழ்விப்பதற்காக அவர் கிரிக்கெட் விளையாடி வெற்றி பெறுவதே ஆகும்.
தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த படம் ஆகும்.
இப் படத்தை எவருமே கண் கலங்காமல் பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி ஒரு அருமையான படம் என்றுதான் கூறவேண்டும்.
ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கிரிக்கெட் வீராங்கனையாக தனது நடிப்பை மிகவும் சிறப்பாக வெளிக்கட்டியிருந்தார்.
இந் நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் கிரிக்கெட் வீராங்கனையாக சஜனா சஜீவன் நடித்திருந்தார். ஆரம்பத்தில் இவர் மட்டுமே ஐஸ்வர்யா உடன் நல்ல நண்பியாக இருந்தவர்.
தற்பொழுது இவர் இந்தியா கிரிக்கெட் மகளிர் அணியில் இடம் பிடித்துள்ளார்.
வங்காளதேசம் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் சஞ்சனா சஜீவன் இந்திய அணிக்காக களமிறங்க உள்ளார். இது வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.