நடிகர் தனுஷ் முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருகின்றார்.
இவர் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இவர் நடிகராக, இயக்குனராக, பாடகராக, பாடலாசிரியராக பணியாற்றிவருகின்றார்.
பவர் பாண்டி படத்தின் வெற்றி இவரை உற்சாகபடுத்தியது. இதனை தொடர்ந்து ராயன் படத்தை இயக்கி தானே நடித்து கொண்டுள்ளார்.
ராயன் படத்திற்கான படபிடிப்பு முடிவடைந்து விட்டது.
இப் படத்தில் எஸ்.ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், நித்யா மேனன், சந்தீப் கிஷன், அபர்ணா முரளி போன்றவர்கள் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ராயன் படம் டீரெயிலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப் படத்திற்கு பெரும் எதிர்பார்புகள் இருக்கின்றது.
ஏ.ஆர்.ரஹ்மான் வழமையாக எந்த படத்திற்கான படபிடிப்பின் போதும் கலந்து கொல்வதில்லையாம்.
ஆனால் தனுஷ் இன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் ராயன் படத்தின் படபிடிப்பின் போது அவரும் சென்று அதிக நேரம் அங்கே செலவிடுவாராம்.
அடுத்த வெற்றிமாறன் தனுஷ் தான் என்று பெயர் எடுத்து விட்டார்.
இவ்வாறு இருக்க ராயன் படம் ஏப்ரல் மாதம் வெளியாகுவதாக இருந்தது. தேர்தல் காலம் என்பதால் படம் ஜூன் மாதம் வெளியாக்குவதாக அறிவிக்கபப்பட்டது.
தற்போது கமலின் இந்தியன் 2 வெளியாக இருப்பதால் மீண்டும் ராயம் ரிலீஸ் தள்ளிபோய் உள்ளது.