படம் வெளியாக முன்பே வசூல் வேட்டையை கிளப்பும் குட் பேட் அக்லி!- ஓடிடி வசூல்…

நடிகர் அஜித்திற்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 2023 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் துணிவு படம் வெளியானது.

இதனை தொடர்ந்து இவரின் படம் தொடர்பாக எந்தவொரு அப்டேடும் வெளியக்காத நிலையில் ரசிகர்கள் வருத்தத்தில் இருதனர்.

இதன் பின்னர் விடாமுயற்சி படம் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகின்றார். இருப்பினும் இந்த படம் தொடர்பான எந்த விதமான அப்டேடும் வெளியாகவில்லை.

தற்போது ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகின்றார். ஆதிக் ரவிசந்திரன் விஷால் நடிப்பில் உருவான மார்க் ஆண்டனி படத்தை இயக்கி அதில் வெற்றியும் கண்டார். இதனை தொடர்ந்தே அஜித்துடன் கமிட் ஆகியுள்ளார்.

மைத்திரி மூவி மேக்கர்ஸ் படத்தை தயாரிக்க இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு இப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப் படத்திற்கு அஜித் 165 கோடி வாங்கியுள்ளார்.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் இப் படத்தில்  பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆனது. இப் படத்தின் ஓடிடி உரிமையை  ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் ரூ. 95 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

more news