வெற்றிமாறனின் படத்தின் டைட்டிலில் திடீர் மாற்றம்!

வித்தியாசமான கதைகளை வைத்து படம் எடுப்பதில் திறமை வாய்ந்தவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவரின் இயக்கத்தில் விடுதலை படம் வெளியானது. இதில் சூரி நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கிய பாத்திரத்திலும் நடித்திருப்பார்.

படம் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்த நிலையில் இந்த படத்திற்கு தேசிய விருதே கிடைத்திருக்கவேண்டியது என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர், இதை தொடர்ந்து சூரி பல படங்களில் ஹீரோவாக நடுத்து வருகின்றார்.

சூரி ஹீரோவாக நடிப்பதற்கு அடித்தளம் வகுத்து கொடுத்தது வெற்றிமாறன் தான். தறப்போது விடுதலை பாகம் 2 ம் உருவாகி வருகின்றது. வெற்றிமாறன் சமூகத்தில் ஒதுக்கபட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் வகையில் படங்களை உருவாக்கி வருகின்றார். இதனால் இவருக்கு எதிராக பல இயக்குனர்களும் இருந்து தான் வருகின்றனர்.

விடுதலை 2 படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதை முடித்து கொண்டு வாடி வசால் படத்தை இயக்கவுள்ளார் என்று கூறப்பட்டது. இதில் சூர்யா தான் ஹீரோவாக நடிக்கவுள்ளார். என்று வெற்றிமாறன் கூறினார். பின் சூர்யா இதில் இருந்து விலகி விட்டார் என்றும் வதந்திகள் பரவியது. இருப்பினும் வெற்றிமாறன் இதில் சூர்யா தான் நடிக்கவுள்ளார் என்று உறுதியாக கூறி விட்டார்.

வெற்றிமாறன் தற்போது கவின் நடிக்கும் மாஸ்க் படத்தையும் தயாரித்து வருகின்றார். மற்றும் மபொசி என்ற படத்தியும் தயாரிக்கின்றார். மபொசி என்பதன் விளக்கம் மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் ஆகும். விமல் மற்றும் சாயாதேவி நாயகன், நாயகியாக நடித்து வரும் இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்து வருகிறார்.

தற்போது இதன் டைட்டில் மாற்றபட்டுள்ளது. இதன் டைட்டிலை சார் என்று மாற்றியுள்ளனர். இது தொடர்பான புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. இதில் ஹீரோவாக நடிக்கும் விமல் ஆசிரியராக நடிக்கின்றார். இப் படத்தை போஸ் வெங்கட் இயக்குகின்றார்.

more news