குக்வித் கோமாளி இப்ரான் மீது எடுக்கபட்ட சட்ட நடவெடிக்கை!-பயத்தில் அவர் செய்த காரியம்

யூடியூப்பர் இப்ரான் ஒவ்வொரு உணவாகங்களிலும் உள்ள உணவுகளை உண்டு, அவ் உணவை பற்றி றிவியூ ஆக பதிவு செய்து மக்கள் மத்தியில் பிரபலமானர்.

பின்பு ஒவ்வொரு பிரபலங்களுக்கும் உணவு சமைத்து கொடுத்து அவர்களுடன் அதை உண்டு அதையும் விடியோவாக பதிவு செய்து வந்தார்.

விஜய் சேதுபதி, நெப்போலியன் போன்ற பல பிரபலங்களுடன் இணைந்து சாப்பிட்டு உள்ளர்.

இவ்வாறு இருக்க சமீபத்தில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஷோ ஆரம்பித்தது. இதிலும் இப்ரான் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

இவர் குக் வித் கோமாளி ஷோவிற்கு சென்றதும் குக் வித் கோமாளி ஷோ ரசிகர்கள், இப்ரான் இந்த நிகழ்ச்சியில் இருந்தால் நாங்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்கமாட்டோம் என்று கூறி வந்தனர். மற்றும் பலர் இவனுக்கு சாப்பிட தானே தெரியும் சமைக்கவெல்லாம் தெரியாது என்றும் கமெண்ட் செய்து வந்தனர்.

இவ்வாறு இருக்க திருமணம் ஆன இவர் தனது மனைவி கர்ப்பமாக உள்ளார் என்றும் அக் குழந்தையின் பாலினத்தை அறிந்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதாகவும் கூறி அவர் மீது சட்டநடவெடிக்கை எடுக்க தமிழ்நாடு மருத்துவ துறை முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் ஒரு குழந்தையின் பாலினத்தை குழந்தை பிறக்க முன்பு அறிந்து கொள்வது சட்ட விரோதமான செயல் ஆகும். இதனால் இவர் துபாய் சென்று அங்கு தனது குழந்தையின் பாலினத்தை அறிந்து அங்கு பார்ட்டியும் வைத்து கொண்டாடியுள்ளார்.

அது மட்டுமல்லாது சமுகவலைத்தளங்களிலும் இதை பற்றி வெளியிட்டுள்ளார். இதனால் இவர்மீது சட்ட நடவெடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு பரிந்துரைக்கபட்டதாக கூறப்படுகின்றது. இதனால் அந்த வீடியோவை இப்ரான் டிலீட் செய்து விட்டார்.

more news