கோட் பட சாட்டிலைட் உரிமையை கைபற்றிய நிறுவனம்!- புஷ்பா 2 ஐ உடைத்து நொருக்கிய தளபதி

தளபதியின் 68 வயது படமான கோட் பட படபிடிப்புகள் வெகு விமர்சையாக நடை பெற்று வருகின்றது. இப் படத்தில் இருந்து விசில் போடு பாடல் வெளியானது.

இப் பாடல் வரிகளால் படம் வெளியாவதற்கு முன்பே எதிர் மறையான கருத்துக்களை பெற்றுவிட்டது.

விஜயின் கோட் படத்தை வெங்கட் பிரபு தான் இயக்கியிருக்கிறார். வெங்கட் பிரபுவின் அனைத்து படங்களுக்கும் யுவன் தான் இசையமைத்து வருகிறார். அதேபோல கோட் படத்திற்கும் இவர் தான் இசையமைத்துள்ளார்.

பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி போன்ற நட்சத்திர பட்டாளமே விஜயுடன் இணைந்து நடிக்கின்றனர்.

இப் படம் செப்டெம்பர் 5 ம் திகதி வெளியாக இருப்பதால் படபிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதில் விஜய் இரு வேடங்களில் நடிக்கின்றார்.

பிகில் படம் போல அப்பா மகன் என இரு வேடங்களில் நடிக்கின்றார். இவ்வாறு இரு வேடங்களில் நடிப்பதெல்லாம் இவர்க்கு புதிது இல்லை. எப்படியும் நடித்து அசத்துவார்.

இப் படத்தில் சிவகார்த்திகேயனும் இணைந்து நடித்திருப்பதாக கூறப்படுகின்றது. ஆனாலும் ஒரு சிலர் அது பொய்யான தகவல் என்று கூறுகின்றனர். ஆனால் இது உண்மையா? பொய்யா? என்று படம் வெளியானதும் தான் தெரியும்.

இவ்வாறு இருக்க அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாக்கி வரும் புஷ்பா 2 படம் வரும் ஆகஸ்ட் 15 ம் திகதி வெளியாகவுள்ளது.  புஷ்பா 2 சாட்டிலைட் உரிமை 80 கோடிகளுக்கு வியாபாரம் ஆகி உள்ளது.

ஆனால் விஜய்யின் கோட் சாட்டிலைட் உரிமை 93 கோடிக்கு வியாபாரம் ஆகி உள்ளது. இந்த உரிமையை  ஜீ நெட்வொர்க் வாங்கியுள்ளது.

more news