விஷாலுக்கு போட்டியாக களமிறங்கும் உதயநிதி!

விஷால், உதயநிதி ஆகிய இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள்.

உதயநிதி நடித்த மாமன்னன் திரைப்படம் அனைவரும் எதிர்பாராத வெற்றியை கொடுத்தது. இவருக்கு மட்டுமல்ல விஷாலுக்குமே மார்க் ஆண்டனியும் பெரும் வெற்றியை கொடுத்தது.

விஷால் மார்க் ஆண்டனின் வெற்றியை தொடர்ந்து ரத்னம் படத்தில் நடித்து வருகின்றார்.

நல்ல நண்பர்களாக இருந்த இருவருக்கும் இடையில் தற்பொழுது உரசல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் நல்ல நண்பர்களாக இருந்த காலங்களில் விஷால் எதுவித பிரச்சனையும் இல்லாமல் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் மூலம் தனது படங்களை வெளியீட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்த விஷால், ரெட் ஜெயண்ட் நிறுவனம் மார்க் ஆண்டனி படத்தை தாமதமாக வெளியிட சொன்னதாகவும் அவர்கள் சொன்னதை கேட்டிருந்தால் இவ்வளவு வெற்றியை ஈட்டியிருக்காது எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் வரும் 26ம் திகதி ரத்னம் படம் வெளியாகவுள்ள நினையில் இதற்கு போட்டியாக அரண்மனை-4 திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்கள் அனைத்தும் இவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால் ரத்னம் படத்திற்கு குறைவான தியேட்டர்களே கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது.

More News