விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் (The Greatest of All Time) படத்தில் நடித்து வருகின்றார். இவ்வாறு இருக்க இப்படத்தில் இருந்து விசில் போடு பாடல் ஒன்று வெளியாகி உள்ளது.
யுவன் இசையமைக்க விஜய் தானே சொந்த குரலில் பாடியுள்ளார். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும் இப்படல் வரிகளால் நாட்டில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
இவர் பாடிய பாடலின் வரிகள் மது பாவனையை ஆதரிக்கும் மற்றும் அதிகரிக்கும் வகையிலும் , நாட்டில் கலவரத்தை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லியோ படத்தில் கூட போதைபொருள் பாவனையை ஆதரித்து பாடல் வெளியிட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியமையால் சில பாடல் வரிகள் நீக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.
இப் பாடலில் “இடி இடிச்சா என் வாய்ஸ் தான்” என்ற வரி மூலமாக மறை முகமாக சில அரசியல் தலைவார்களையும் சீண்டியிருக்கிறார்.
“வெடி வெடிச்சா என் பாய்ஸ்” விஜய் மீது யார் புகார் கொடுத்தாலும் அவர்கள் நற்பணி இயக்கத்தை வைத்து சம்பந்தப்பட்ட நபரை மிரட்டும் தொணியில் “வெடி வெடிச்சா என் பாய்ஸ் தான்” என்ற வார்த்தையால் மறை முகமாக மிரட்டுகிறார் விஜய் என விமர்சனம் எழுந்துள்ளது.
இப்பாடல் வரிகளால் நாட்டில் கலவரம் வெடிக்கலாம் என்று சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் ஒன்று அளிக்கப்பட்டு இருக்கிறது.